For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவில் சாம் பில்லிங்ஸ்.. புதிய கீப்பர் வந்துவிட்டார்.. பவுலிங் போட திட்டமிடுகிறாரா டோணி?

சென்னை அணியில் தற்போது இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

By Shyamsundar

Recommended Video

கடைசி நேரத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது

சென்னை: சென்னை அணியில் தற்போது இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று இவர் சென்னை அணியின் 11 பேர் கொண்டு அணியில் இடம்பெற்றுள்ளார்.

கேதார் ஜாதவ் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார்.

சமயங்களில் கேதார் மீண்டும் அணிக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. சாம் பில்லிங்ஸ் சமயங்களில் கீப்பிங் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

ஏன் விலகல்

ஏன் விலகல்

கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்தான் ஜாதவிற்கு அடிப்பட்டது. இதனால் அந்த போட்டியில் இருந்து பாதியில் விலகினார். பின் கடைசி நேரத்தில் வந்து சென்னை அணிக்காக வின்னிங் ஷாட் அடித்தார். தற்போது காயம் மோசமானதால் அணியைவிட்டே விலகியுள்ளார்.

யார் இவர்

யார் இவர்

சாம் பில்லிங்ஸ் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 1 கோடி கொடுத்து சாம் பில்லிங்ஸ் ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்தை சேர்ந்த இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் கீப்பர்.

யாருக்கு பதில் விளையாடுகிறார்

யாருக்கு பதில் விளையாடுகிறார்

தற்போது இவர் கேதார் ஜாதாவிற்கு பதிலாக விளையாடுகிறார். சென்னை அணியில் இவர் 4வது வீரராக களமிறங்க உள்ளார். இவர் இங்கிலாந்து அணியிலும் 4வது வீரராக விளையாடி வருகிறார். அணியில் புதிதாக இணைந்த டேவிட் வில்லிக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

எப்படி இவர்

எப்படி இவர்

இவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். பேட்ஸ்மேனான இவர் பார்ட் டைம் பவுலிங் செய்வதில் வல்லவர். ஆனால் கீப்பரான பின் இவருக்கு பவுலிங் வாய்ப்பு கொடுப்படவில்லை. இவர் களத்தில் இருப்பதால் சமயத்தில் டோணி பந்து வீச வாய்ப்பு இருக்கிறது. டோணி கடந்த சில மாதங்களாக பவுலிங் பயிற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 10, 2018, 21:04 [IST]
Other articles published on Apr 10, 2018
English summary
Sam Billings joins in CSK Den replacing Kedhar Jadhav.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X