For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவருக்கு என்ன பிரச்சினைனே புரியல” ரோகித்-க்கு எதிராக வரும் குற்றச்சாட்டுக்கள்.. சீனியர் தந்த ஆதரவு

மும்பை: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிகெட் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்புவது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் இந்திய அணியில் தற்போதைக்கு அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பான ஃபார்முக்கு வந்துவிட்டனர். தொடர்ச்சியாக 300+ ரன்களை இந்தியா குவித்து வருகிறது.

ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகளின் மீது தான் ரசிகர்கள் கவலைக் கொண்டுள்ளனர். ஏனென்றால் கடைசி 50 சர்வதேச இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார்.

யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர் யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர்

 ரோகித்தின் ஃபார்ம்

ரோகித்தின் ஃபார்ம்

இதற்கு முன் நடைபெற்ற இலங்கை தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய அவர் 67 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதே போல 3வது போட்டியில் 42 ரன்களை அடித்தார். ஆனால் அவரால் சதத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யவில்லை. நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

மஞ்ச்ரேக்கர் பேச்சு

மஞ்ச்ரேக்கர் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து மஞ்ச்ரேக்கர் பேசியுள்ளார். அதில், விராட் கோலி சதமடிக்காமல் இருந்த போது அவரின் செயல்பாடுகளில் தவறு இருந்தது, ஃபார்மில் இல்லை. ஆனால் ரோகித் சர்மாவிடம் குறை கூறும் அளவிற்கு எதுவுமே இல்லை. பந்துகளை சரியான நேரத்தில் சரியாக ஷாட் அடிக்கிறார். ஆனால் ஏன் பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடிவதில்லை என எனக்கு புரியவில்லை.

பிரச்சினை இல்லை

பிரச்சினை இல்லை

70 - 80 ரன்கள் வரை சகஜமாக எடுத்து செல்கிறார். ஆனால் அதன்பின்னர் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 300 - 350 ரன்கள் குவித்து வரும் வரையில் ரோகித் சர்மா 100 அடிக்காமல் இருப்பது பெரிதாக தெரிகிறது. எனினும் அவர் சதமடிப்பது வெகுதூரத்தில் இல்லை. மற்றபடி ஃபார்மில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

இதுஒருபுறம் இருக்க விராட் கோலி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போலவே ரோகித் சர்மாவின் மீதும் எடுக்க வேண்டும் என கம்பீர் விளாசியுள்ளார். அதில், 50 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருப்பது என்பது மோசமான தகவலாகும். ஓரிரு தொடர்களில் சதம் அடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. என்னைப்பொறுத்தவரையில் கோலி மூன்றரை ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்த போது எப்படிபட்ட நடவடிக்கைகளை எடுத்தோமோ, அதே போன்ற விஷயங்களை ரோகித்திற்கும் செய்ய வேண்டும். சற்று கடுமையாக இருந்தால் தான் சரிவரும் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 20, 2023, 11:23 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Former Indian cricketer Sanjay Manjrekar backs Rohit sharma after didn't score hundred in last 50 innings, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X