என்ன சிக்ஸ்! மைதானத்தில் வேலைபார்த்தவரின் லேப்டாப்பை பதம்பார்த்த வாட்சன் சிக்ஸ்!

Posted By:
மைதானத்தில் இருந்தவரின் லேப்டாப்பை உடைத்த வாட்சனின் சிக்ஸ்- வீடியோ

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியில் சென்னை வீரர் ஷேன் வாட்சன் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் இருந்த லேப்டாப்பை பதம் பார்த்துள்ளது.

கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்தர் ஜடேஜா 2 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஷேன் வாட்சன், ராயுடு, பிராவோ, சாம் பில்லிங்ஸ் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.

வாட்சன்

வாட்சன்

நேற்றைய போட்டியில் சென்னையின் அணியின் ஓப்பனிங் வீரர் ஷான் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி தொடக்கத்திலேயே நல்ல ஸ்கோர் எடுத்தது. 202 ரன்கள் என்று இலக்கை நோக்கி விளையாடியதால் பொறுப்பை உணர்ந்து ஷேன் வாட்சன் மிகவும் அதிரடியாக ஆடினார்.

எத்தனை ரன்கள் எடுத்தார்

எத்தனை ரன்கள் எடுத்தார்

நேற்றைய போட்டியில் வாட்சன் மொத்தம் 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். அதே போல் இன்னொரு ஓப்பனர் அம்பதி ராயுடு 39 ரன்கள் எடுத்தார். இவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்தார். இதனால் சென்னை அணி 5 ஓவர்களிலேயே 80 ரன்கள் எடுத்தது.

செம சிக்ஸ்

வாட்சன் அடித்த மூன்று சிக்ஸ்களில் ஒரு சிக்ஸ் வர்ணனையாளர்கள் பக்கம் சென்று விழுந்தது. அதில் உள்ளே தொழில்நுட்பப் குழுவில் வேலை பார்த்த நபர் ஒருவரின் லேப்டாப்பில் பந்து வேகமாக விழுந்துள்ளது. இதனால் அந்த லேப்டாப் உடைந்தது. இந்த போட்டோ வெளியாகியுள்ளது.

கிண்டலாக கேட்டார்

இது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. இவர் ''வாட்சன் சிக்ஸ் மூலம் லேப்டாப் ஒன்றை உடைத்துள்ளார். ஐபிஎல் நிர்வாகமே இதற்கு எப்படி காசு கொடுக்க போகிறீர்கள்'' என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Shane Watson six broke a laptop in yesterday IPL match.
Story first published: Wednesday, April 11, 2018, 11:52 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற