சென்னை வெள்ளத்தின் போது கண்ணீர்விட்ட டு பிளசிஸ்.. அவர் மீது செருப்பு வீசலாமா?

Posted By:
IPL 2018, டு பிளசிஸ் மீது செருப்பு வீசலாமா?- வீடியோ

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியின் போது சென்னை வீரர் டு பிளசிஸ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.

கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டி நடக்குமா, நடக்காதா என்று கடைசி வரை சந்தேகம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.

செருப்பு வீசினார்கள்

செருப்பு வீசினார்கள்

இந்த போட்டியில் இத்தனை பாதுகாப்பையும் மீறி செருப்பு வீசப்பட்டுள்ளது. 8 வது ஓவரின் முதல் பந்து வீசிய போது செருப்பு வீசி இருக்கிறார்கள். போட்டி சிறிது நேர தடைக்கு பின் மீண்டும் தொடங்கியது. செருப்பு வீசியவர்களை உடனடியாக போலீஸ் கைது செய்தது.

பிளசிஸ் கோபம்

டு பிளசிஸ் சென்னை வீரர்களை சந்தித்துவிட்டு பெவிலியன் திரும்பும் போது செருப்பு வீசியுள்ளனர். இதை கையிலெடுத்து சென்னை வீரர் டு பிளசிஸ் ரசிகர்களை பார்த்து பேசாமல் அமைதியாக நின்றார். அவர் சோகமாக நிற்கும் புகைப்படம் இணையம் முழுக்க பரவி வருகிறது.

குரல்

சென்னையில் வெள்ளம் வந்த போது, டு பிளசிஸ் அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ''சென்னை மக்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்'' என்று வருத்தமாக 2015 வெள்ளத்தின் போது டிவிட் செய்திருந்தார். சென்னை அணிக்காக அவர் நீண்ட நாட்களாக விளையாடி வருவதால் அவருக்கு சென்னை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதானா?

இதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். இவர் ''சென்னையை நேசிக்கிற ஒருத்தனுக்கு நீங்க குடுத்த பரிசு இதுதானா எம்மக்களே'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அது ஆக்கப்பூர்வமானதாக மாறுவதில்லை என்பது நெடுங்கால குற்றச்சாட்டு. அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் நம்மவர்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Some people threw Chappels on Faf Du Plessis in yesterday IPL match.
Story first published: Wednesday, April 11, 2018, 10:53 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற