For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட, நீக்கப்பட்டது சச்சின் இல்லையாம்.. அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கராம்!

மும்பை: திடீரென டெண்டுல்கர் நீக்கம் என்ற செய்தியைப் பார்த்து உங்களைப் போலத்தான் நாங்களும் பதறிப் போனோம். பிறகுதான் தெரிந்தது, அது சச்சின் இல்லை அவரது மகன் அர்ஜூன் என்று.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வரும் அர்ஜூன் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். காரணம், மோசமான பார்ம் என்று கூறியுள்ளனர்.

30 பேர் பட்டியலில் இடமில்லை

30 பேர் பட்டியலில் இடமில்லை

மும்பை அணிக்கான 30 பேர் கொண்ட பிராபபிள் பட்டியலில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் இடமில்லை.

மேற்கு மண்டலத்துக்காக ஆடினாரே

மேற்கு மண்டலத்துக்காக ஆடினாரே

14 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பைக்காக ஆடியிருந்தார்.

கப்பு அவங்களுக்குத்தான்.. ஆனால் அர்ஜூன் விளையாடலயே

கப்பு அவங்களுக்குத்தான்.. ஆனால் அர்ஜூன் விளையாடலயே

கோப்பையை அந்த அணிதான் வென்றது. ஆனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை.

பெற்றோர்கள் குமுறல்.. குவிந்த புகார்

பெற்றோர்கள் குமுறல்.. குவிந்த புகார்

சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜூனை அணியில் சேர்த்து விட்டதாக பல பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டிருந்தனர். புகார்களும் கூறியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

மோசமான ஆட்டத்தால் நீக்கமாம்

மோசமான ஆட்டத்தால் நீக்கமாம்

இந்த நிலையில்தான் தற்போது அர்ஜூனை அணியிலிருந்து நீக்கியுள்ளது தேர்வாளர்கள் குழு. மோசமான பார்ம் காரணமாக அர்ஜூன் நீக்கப்பட்டுள்ளாராம்.

ஒரு ஆப் கூட அடிக்காட்டி எப்பூடி....

ஒரு ஆப் கூட அடிக்காட்டி எப்பூடி....

தேர்வுப் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதுவே அவருக்கு ஆப்பாக மாறி விட்டது.

விளையாடாட்டி இடம் கிடையாது

விளையாடாட்டி இடம் கிடையாது

இதுகுறித்து தேர்வுக் குழுவில்இடம் பெற்றிருந்த ஒருவர் கூறுகையில், சரியாக விளையாடாவிட்டால் அணியில் இடம் கிடையாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மீண்டும் அவர் சிறப்பாக விளையாடி பார்முக்குத் திரும்பினால் மும்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றார்.

சச்சின் மகன்னா...!

சச்சின் மகன்னா...!

மேலும் சச்சின் மகன் என்பதற்காக ஈசியாக அணியில் நுழைந்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த அதிரடி முடிவை தேர்வாளர்கள் எடுத்தனராம்.

பரவாயில்லையே.. சச்சின் மகனாகவே இருந்தாலும் கஷ்டப்பட்டுத்தான் ஆடனும் போல....!

Story first published: Tuesday, July 9, 2013, 15:33 [IST]
Other articles published on Jul 9, 2013
English summary
The selectors have sent a strong message to Sachin Tendulkar's son Arjun by not picking him in the 30-man Under-14 category probables list for Mumbai. Arjun Tendulkar was a member of the Mumbai Under-14 team earlier this year for West Zone matches. Mumbai won the tournament but he did not get to play a single game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X