For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோகித், டிராவிட்டின் நெகிழ்ச்சி செயல்.. மூன்று பேருக்குமே பெரிய மனசு.. இது அணி இல்ல குடும்பம்

அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்களுக்காக கோலி, ரோகித் மற்றும் டிராவிட் செய்த காரியம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று நாளை முதல் சிட்னியில் தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது.

இரண்டாவது அரையிறுதி வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

ஆஸி.யில் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது..பாலியல் துன்புறுத்தல் புகார்ஆஸி.யில் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது..பாலியல் துன்புறுத்தல் புகார்

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

இங்கிலாந்து அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே பலமாக காணப்படுவதால், இந்தியாவுக்கு கடுமையான சவால்கள் காத்துள்ளது. இந்த தொடரில் அடிலெய்டில் இந்தியா ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆனால் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் தற்போது தான் அடிலெய்டில் அவர்கள் விளையாட உள்ளனர். இது இந்திய அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து குறை

இங்கிலாந்து குறை

இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் நடப்பு தொடரில் சுழற்பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளவில்லை. குறிப்பாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 113 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி, 18.1வது ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டினர். எனினும் அதற்காக இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இங்கிலாந்து அணி வீரர்கள் எப்போது வேண்டுமானாலும், களத்தில் பேட்டிங்கில் சங்கு சக்கரம் போல் சுழன்று அடிப்பார்கள், இல்லை புஸ்வானம் போல் ஆகி விடுவார்கள்.

விமான பயணம்

விமான பயணம்

இந்தப் போட்டியை குறித்து ஏற்கனவே பேசிய ரோகித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கூறினார். இதனிடையே, இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அடிலெய்ட்க்கு அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக வந்தது. இரு நகரத்திற்கும் இடையில் 725 கி.மீ துரம் ஆகும். இந்த நிலையில், ஐசிசியின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசிதளை உடைய பிஸ்னஸ் விகுப்பு டிக்கெட்டுகள் தரப்படும்.

நெகிழ்ச்சி செயல்

நெகிழ்ச்சி செயல்

அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட், ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால், கோலி, ரோகித், டிராவிட் ஆகியோர் தங்களது இருக்கையை ஆர்ஸ்தீப், முகமது ஷமி, புவனேஸ்வர் குமாருக்கு வழங்கி, அவர்கள் சாதாரண இருக்கைக்கு சென்றுவிட்டனர், இதன் மூலம் வேகப்பந்துவீச்சாளர்கள் பயண களைப்பு அடையாமல் இருப்பார்கள் என்பதால் மூவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதனால் இது அணி அல்ல, விக்ரமன் சார் படம் என்று ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Story first published: Tuesday, November 8, 2022, 10:51 [IST]
Other articles published on Nov 8, 2022
English summary
Star Indian Players gave their business class seat to fast bowlers for recovery
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X