சிஎஸ்கேவின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'.. தரமான சம்பவம்.. மிரண்டுட்டேன் - சுனில் கவாஸ்கர்

மும்பை: ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எழுச்சி ரசிகர்களை மட்டுமல்ல, சுனில் கவாஸ்கரையும் வியக்க வைத்துள்ளது.

2008ல் ஐபிஎல் ஆரம்பித்தது முதல் இன்று வரை, கடந்த 2020 சீசனில் மட்டும் தான் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்க்கு என்ட்ரி கொடுக்காமல் வெளியேறியது.

தான் விளையாடிய மற்ற அனைத்து சீசன்களிலும், 'நான் ராஜா.. எங்கேயும் நான் ராஜா' மோட் தான். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த சீசன் மட்டும், 'எள்ளு வய பூக்கலையே' ஆனது.

ஐபிஎல் ஒத்திவைப்பால் ஒரு அணிக்கு மட்டும் கொண்டாட்டம்.. இனி கஷ்டமே இருக்காது.. கவாஸ்கர் கிண்டல்!

 சிஎஸ்கே அதகளம்

சிஎஸ்கே அதகளம்

இந்த சூழலில், 2021க்கான ஐபிஎல் சீசன் இந்தியாவில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை ஐந்தாவது இடம் பிடிக்கும், கடைசி இடம் பிடிக்கும், பிளே ஆஃப் போகாது என்று நம்மூர் கம்பீர் தொடங்கி, வெளியூர் ஸ்காட் ஸ்டைரிஸ் வரை ஆரூடம் சொன்னார்கள். ஆனால் அத்தனை யூகங்களையும் சுக்கு நூறாக்கிய சிஎஸ்கே, இந்த சீசனில் அதகளப்படுத்தியது. 7 போட்டிகளில் 5 வெற்றி. அதுவும், மும்பைக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் தான் தோற்றது. தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்தது தோனி ஆர்மி.

 எதிர்பாரா எழுச்சி

எதிர்பாரா எழுச்சி

குறிப்பாக, புள்ளிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் ரன் ரேட் +1.263. வேறு எந்த அணிக்கும் இல்லாத ஒரு ரன் ரேட் இது. ஸோ, சென்னை மேலும் சில ஆட்டங்களில் வெற்றிப் பெற்றாலே, எளிதாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால், இந்தியாவில் அதிகரித்த கொரோனா பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல், ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் இந்த எழுச்சி குறித்து, மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் சிலாகித்துள்ளார்.

 பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

இதுகுறித்து அவர் ஸ்போர்ட்ஸ்டார்-க்கு எழுதியுள்ள கட்டுரையில், "கடந்த ஆண்டு பெரும் ஏமாற்றமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு எழுச்சிப் பெற்று, இத்தனை ஆண்டுகளாக வலம் வந்த ஒரு சாம்பியன் அணியாகவே வந்துவிட்டது. அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், இந்த முறை தனது ஆற்றலை புதுப்பித்து வந்திருக்கிறது. மொயீன் அலியை மூன்றாவது வீரராக களமிறக்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக் மூவ். ஆறு போட்டிகளில் அவர் 206 ரன்கள் எடுத்துள்ளார்.

 பவுலிங் வீக்

பவுலிங் வீக்

"இடது கை பேட்ஸ்மேனான அலியை ஒன் டவுனில் இறக்கியதால், பல இன்னிங்ஸில் அவரது அடி இடி போன்று இருந்தது. அனுபவமுள்ள ஃபாஃப் டு பிளசிஸ் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார், மேலும், நம்பிக்கைக்குரிய ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு சிறந்த தொடக்கங்களை வழங்கினார். சாம் கரண் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து ஈர்க்கிறார், தன்னை மேம்படுத்துகிறார். இப்போது ஏலம் எடுக்க அவர் ஒரு சரியான ஆல் ரவுண்டராக உள்ளார். எனினும், மும்பைக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் எடுத்த போதிலும், கடைசி பந்தில் ஆட்டத்தை இழந்ததை பார்க்கையில், ​​சென்னை அணி தனது பவுலிங்கை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது தெரிய வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
gavaskar wonder csk's comeback in ipl 2021 - ஐபிஎல் 2021
Story first published: Saturday, May 15, 2021, 9:44 [IST]
Other articles published on May 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X