For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொளந்து கட்டிய பிளட்சர்.. மிரண்டு போன இலங்கை!

பெங்களூர்: கெய்ல் இல்லை. எளிதாக ஜெயித்து விடலாம் என்ற இலங்கையின் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் ஆண்ட்ரே பிளட்சர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிளட்சர் நேற்று அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இலங்கை பந்து வீச்சாளர்களைத் திணறடித்து விட்டார்.

ஆரம்பத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சைப் பார்த்தபோது மேற்கு இந்தியத் தீவுகள் தேறுமா என்ற சந்தேகம் வரத்தான் செய்தது. ஆனால் பிளட்சர் நிலைத்து நின்று ஆடியதோடு, அதிரடியும் காட்டி அணிக்கு எளிதான வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டார்.

போராடிய சண்டிமால்

போராடிய சண்டிமால்

இலங்கை பேட் செய்தபோது தினேஷ் சண்டிமால் சிறப்பாகத்தான் ஆடி வந்தார். ஆனால், வண்டி டாப் கியருக்கு மாறிய சமயம் பார்த்து அவரை ரன் அவுட் செய்து விட்டனர்.

நல்ல இடைவெளியில் விக்கெட்

நல்ல இடைவெளியில் விக்கெட்

மேற்கு இந்தியத் தீவுகள் பந்து வீச்சாளர்கள் சரியான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியதால் இலங்கை அணியால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போய் விட்டது.

பட்டாக்கத்தி பத்ரி

பட்டாக்கத்தி பத்ரி

மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி, நேற்று இலங்கை அணியைப் பதம் பார்த்து விட்டார். அட்டகாசமாக பந்து வீசிய அவர் 4 ஓவர்கள் போட்டு 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

கடும் பிரஷர்

கடும் பிரஷர்

மேற்கு இந்தியத் தீவுகள் ஆரம்பத்திலிருந்தே பிரஷரை சரியான முறையில் கொடுத்து வந்ததால் இலங்கை அணியால் எந்த இடத்திலும் சுதாரிக்க முடியாமல் போய் விட்டது.

சற்றே ஆட்டம் காட்டிய திசரா

சற்றே ஆட்டம் காட்டிய திசரா

இருப்பினும் திசரா பெரேரா சற்று சிறப்பாக ஆடினார். 29 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை நொறுக்கினார். இதனால் இலங்கை அணியால் கெளரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.

122 மட்டுமே

122 மட்டுமே

ஆல் அவுட் ஆகாமல் 20 ஓவர்களை இலங்கை பூர்த்தி செய்ததே பெரிய ஆச்சரியம்தான். 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை அந்த அணி எடுத்தது.

அதிரடி சேஸிங்

அதிரடி சேஸிங்

பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் சேஸிங்கை அதிரடியாகத் தொடங்கியது. பிளட்சரும், ஜான்சன் சார்லஸும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். கெய்ல் தசைப்பிடிப்பு காரணமாக வரவில்லை.

மிரட்டிய வான்டர்சே

மிரட்டிய வான்டர்சே

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஜெப்ரி வான்டர்சே சற்று மிரட்டினார். மிடில் ஓவர்களில் அவரது மிரட்டல் மேற்கு இந்தியத் தீவுகளை சற்றே மிரள வைத்தது.

4-1-11-1

4-1-11-1

4 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் போடடு, 11 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை தூக்கினார். எதிர்காலத்தில் சிறந்த பந்து வீச்சாளராக வரக் கூடிய அத்தனை அம்சங்களும் இவரிடம் உள்ளன.

பிளட்சர் தடை

பிளட்சர் தடை

ஆனால் இலங்கையின் பந்து வீச்சை பிள்டசர் சீர்குலைத்து விட்டார். பட்டாசாக பொறிந்து தள்ளிய அவர் பிரமாதக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்களைக் குவித்தார்.

முதல் அரை சதம்

முதல் அரை சதம்

பிளட்சருக்கு இது முதல் அரை சதமாகும். கெய்ல் இல்லாத நிலையிலும் பிளட்சரின் வான வேடிக்கை காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் எளிதான வெற்றியைப் பெற முடிந்தது.

Story first published: Monday, March 21, 2016, 11:46 [IST]
Other articles published on Mar 21, 2016
English summary
WI player Andre Fletcher's brilliant Knock lifted the WI in the match against Sri Lanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X