For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரட்டிப்பான பலம்..ஃபெபியன் ஆலனுக்கு மாற்றாக சூப்பர் வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ் கோப்பை உறுதியா?

அமீரகம்: டி20 உலகக்கோப்பையில் அதிரடி ஆல்ரவுண்டரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அவருக்கு மாற்றாக மற்றுமொரு அதிரடி புயலை களமிறக்கியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் சூடுபிடித்துள்ளது. தகுதிச்சுற்றுப்போட்டிகள் நிறைவுற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 23ம் தேதிமுதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.

எந்தவொரு அணிக்கும் சாதகமாக இல்லாத வகையில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெறுவதால் யார் கோப்பையை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வுடி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வு

வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும் அணிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. எனவே இந்த முறையும் கோப்பையை வெல்ல அற்புதமான அணியுடன் களமிறங்கியுள்ளது.

திடீர் பின்னடைவு

திடீர் பின்னடைவு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயீரன் பொல்லார்ட், கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ரஸல் போன்ற அனுபவ வீரர்களுடன் எவன் லிவிஸ், நிகோலஸ் பூரன்,ஹெட்மையர் போன்ற இளம் வீரர்களும் கலவையாக இடம்பெற்றுள்ளனர். ஆனால் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஃபெபியன் ஆலன் கணுக்கால் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

அமீர மைதானம் சுழலுக்கு சாதகமாக தற்போது உள்ளது. இதன்காரணமாக அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஃபெபியன் ஆலனுக்கு மாற்று வீரராக அகில் ஹோசன் என்ற இளம் பவுலரை வெஸ்ட் இண்டீஸ் இணைந்துள்ளது. நெட் பவுலராக அழைத்துச்செல்லப்பட்ட அவர் தற்போது மெயின் அணிக்கு சென்றுள்ளார்.

Recommended Video

T20 World Cup-ஐ கைப்பற்ற Virat Kohli-க்கு இவங்க உதவுவாங்க- Jonty Rhodes
யார் இந்த ஹோசன்

யார் இந்த ஹோசன்

26 வயதாகும் அகில் ஹோசன் இந்தாண்டு சிபிஎல் தொடர் மூலம் பிரபலமானார். இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் 13 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அவரின் எகானமி 4.92 ஆகவுள்ளது. இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 சர்வதேச போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 22, 2021, 12:17 [IST]
Other articles published on Oct 22, 2021
English summary
Akeal Hosein replaces in West Indies squad for injured Fabian Allen in T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X