For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டி கட்டணத்தில் 60% அபராதம்.. முதல் ODIல் இந்திய அணி தவறு செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தவறு செய்ததாக கூறி போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரோகித்தும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி கண்டது.

முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 337 ரன்கள் வரை விரட்டிவிட்டதால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர் யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர்

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இந்நிலையில் அடுத்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் சூழலில் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். அதாவது முதல் போட்டியின் போது ஐசிசி கொடுக்கப்பட்ட நேரத்தை விட, பந்துவீசுவதற்கு இந்தியா அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீத தொகையை அபராதமாக விதித்துள்ளனர்.

ஏன் இவ்வளவு தொகை

ஏன் இவ்வளவு தொகை

ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு கடைசி ஓவரை வீசியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நேரம் தாண்டி வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% தொகை அபராதமாக பிடிக்கப்படும். அதன்படி பார்த்தால், இந்திய அணி முதல் போட்டியில் 3 ஓவர்களை வீசியதால் மொத்தமாக 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கேப்டன் ரோகித் சர்மாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இது ஒருபுறம் இருக்க, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயன் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருபுறம் வெற்றி பாதையை தொடர இந்திய அணியும், மறுபுறம் பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டி வருகின்றனர்.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

இந்திய அணியை பொறுத்தவரை 2வது போட்டிகாக பேட்டிங்கில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது எனத்தெரிகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் நல்ல அனுபவம் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. பவுலிங்கை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் மட்டும் நீக்கப்பட்டு, உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் வருவார் எனத்தெரிகிறது.

Story first published: Friday, January 20, 2023, 16:44 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Rohit sharma and co fined 60% of the match fee for maintaining slow over-rate in New Zealand ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X