For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜஸ்பிரித் பும்ராவுக்கு தரப்படும் நெருக்கடி.. சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்திய அணி.. ரசிகர்கள் கோபம்!

திருவனந்தபுரம்: இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் காயத்தால் பிசிசிஐ பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.

Recommended Video

T20 Worldcupல் இருந்து காயம் காரணமாக விலகிய Bumrah!

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

“என்னங்க சொல்றீங்க”.. ஜஸ்பிரித் பும்ரா உடல்நிலை குறித்து ஹர்திக் தந்த அப்டேட்.. ரசிகர்கள் அதிர்ச்சி! “என்னங்க சொல்றீங்க”.. ஜஸ்பிரித் பும்ரா உடல்நிலை குறித்து ஹர்திக் தந்த அப்டேட்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பும்ராவின் விலகல்

பும்ராவின் விலகல்

இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக விமர்சனங்கள் இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணியிடம் 106 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். என்னதான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியது.

என்ன காரணம்

என்ன காரணம்

காயத்தில் இருந்து மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியிலும் விலகுவதாக அறிவிப்பு வெளியானது. அவருக்கு முதுகில் வலி பிரச்சினை இன்னும் இருப்பதாகவும்,பரிசோதனை நடந்து வருவதாகவும் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்தார்.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் இது புது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா விவகாரத்தில் ஒரு தெளிவு இன்றி பிசிசிஐ உள்ளது. ஓய்வு தேவை என்ற சூழலில் இருக்கும் அவரை, அவசரப்படுத்தி அணிக்குள் சேர்க்கிறார்களா?? என்ற கேள்வி எழுகிறது.

9 நாட்கள் அவகாசம்

9 நாட்கள் அவகாசம்

ஆஸ்திரேலிய தொடரிலும் இதே போல இக்கட்டான சூழலில் கொண்டு வரப்பட்டார். ஆனால் 4 ஓவர்களில் 50 ரன்களை அவர் வாரி வழங்கினார். இதனால் முழுமையாக உடற்தகுதி பெறாத ஒருத்தரை நம்பி டி20 உலகக்கோப்பை வரை செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாட்டை செய்ய அக்டோபர் 9ம் தேதியே கடைசி நாள் என்பதால் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Story first published: Thursday, September 29, 2022, 15:11 [IST]
Other articles published on Sep 29, 2022
English summary
Team India got a trouble after Jasprit bumrah not fully recovered from injury, Rohit in confusion over t20 world cup squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X