For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லியா, டிவில்லியர்சா?: அதிரடி பவுலர் வாசிம் அக்ரம் சொல்வதை பாருங்கள்

By Veera Kumar

மும்பை: சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியா அல்லது தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்சா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வர்ணிக்கப்படுபவர் வாசிம் அக்ரம். மணிக்கு 145 கி.மீ வேகத்தில், இரு புறமும் ஸ்விங் ஆகும் வகையில் பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரு வகை போட்டிகளிலும் தலா 400 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர் 'ஸ்விங் சுல்தான்' என வர்ணிக்கப்படும் வாசிம் அக்ரம்.

சச்சினுக்கு புகழாரம்

சச்சினுக்கு புகழாரம்

இந்திய டிவி சேனல் ஒன்றுக்கு வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவருமே பவுலர்களுக்கு சவாலானவர்கள்தான். சச்சின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம்.

பயப்படும் வாசிம்

பயப்படும் வாசிம்

விராட் கோஹ்லியும் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிக்கிறார். விராட் கோஹ்லிக்கு என்னை பவுலிங் வீசச் சொன்னால் நான் சிரமமாகவே உணருவேன்.

நுணுக்கமான ஷாட்டுகள்

நுணுக்கமான ஷாட்டுகள்

விராட் கோஹ்லி தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். பேட்டிங் டெக்னிக்குகளும் சிறப்பாக உள்ளது. ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அவர் ஆடுவதில்லை. கிரிக்கெட்டிங் ஷாட்டுகளை மட்டுமே ஆடுகிறார். ஆனால், பேட்டின் நடு பகுதியில் பந்து படும் வகையில் அவர் சீராக ஆடுகிறார். இதனால்தான் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர முடிகிறது.

பலமானவர்

பலமானவர்

நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் கோஹ்லி 36 சிக்சர்கள் விளாசியுள்ளார். நான் அனைத்து வகை போட்டிகளிலும் மொத்தமே 50 பிளஸ் சிக்சர்கள்தான் அடித்திருந்தேன். அக்காலகட்டத்தில் சிக்சர் அடிப்பது மிகவும் அரிதானது. கோஹ்லி ஷாட்டின் பலத்தை இந்த சிக்சர்கள் பறைசாற்றுகின்றன.

மிஸ்டர் 360 டிகிரி

மிஸ்டர் 360 டிகிரி

டிவில்லியர்ஸ் சிறந்த வீரர். எந்த சூழ்நிலையிலும், அணியை தனியாளாக நின்று கரைசேர்க்கும் வல்லமை உள்ளவர். 360 டிகிரி கோணத்திலும் ஷாட் அடிக்கும் திறமைசாலி டிவில்லியர்ஸ். வேகப்பந்து வீச்சாளர்களை மிக எளிமையாக கையாளுகிறார். ஸ்பின்னர்களையும் விட்டுவைப்பதில்லை.

ஒப்பிட முடியாது

ஒப்பிட முடியாது

அதேநேரம், கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரையும் ஒப்பிடுவது சரியல்ல. இருவரும் வெவ்வேறு டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள். இருவருமே மேட்ச் வின்னர்கள். தனி நபராக அணியை காப்பாற்றும் திறமைசாலிகள். எனவேதான், இருவருமே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 27, 2016, 12:47 [IST]
Other articles published on May 27, 2016
English summary
"Very difficult to compare Kohli and AB de Villiers, They have different techniques, they are different players but are very consistent and match-winners says, Wasim Akram.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X