தமிழக வீரரை எடுக்க மல்லுக்கு நின்ற டெல்லி அணி.. சாதனை படைத்த விஜய் ஷங்கர்

Posted By:

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து இருக்கிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். தற்போது இன்னொரு தமிழக வீரர் விஜய் ஷங்கரும் அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறார்.

இன்னும் நிறைய தமிழக வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் நாளை ஏலம் விடப்படுவார்கள்.

யார் இவர்

யார் இவர்

தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் கடந்த டிசம்பரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். திருநெல்வேலியை பூர்விகமாக கொண்டவர். இவர் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆவார். ரஞ்சியில் 27 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பவுலராகவும் இருக்கிறார்.

ஐபிஎல் அணி

ஐபிஎல் அணி

விஜய் ஷங்கர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். மேலும் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மிகவும் திறமையான வீரரான இவர் 2015ல் இருந்த இந்திய 'எ' அணிக்காக விளையாடி வருகிறார்.

டெல்லி

டெல்லி

தற்போது இவர் டெல்லி அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். டெல்லி அணி இவருக்கு 3.20 கோடி கொடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகையே 40 லட்சம்தான்.

திட்டம்

திட்டம்

இவரை சென்னை அணி எடுக்கும் என்றுதான் முதலில் கூறப்பட்டது. ஆனால் இவரையும் சென்னை அணி எடுக்க தவறிவிட்டது. நாளை நடக்கும் ஏலத்தில் இன்னும் அதிக வீரர்களை சென்னை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. Vijay Shankar sold out to Delhi in IPL auction 2018. He sold out for 3.20cr. He has played for Chennai Super Kings, Sun Risers Hyderabad and Indian A team.
Story first published: Saturday, January 27, 2018, 17:49 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற