For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கேப்டன் பதவியில் இருந்து.. கோலி விலகுவதற்கு இதுதான் காரணம்... உண்மையை போட்டுடைத்த கோச்!

டெல்லி: நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு பெரிய குண்டு ஒன்றை தூக்கி வீசினார் இந்திய கேப்டன் விராட் கோலி.

Recommended Video

IPL 2021 உடன் RCB அணியின் Captain பதவியில் இருந்து விலக Virat Kohli முடிவு

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

''டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. எனவே பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

கடினமான முடிவு

கடினமான முடிவு

ஒரு வீரராக டி20 போட்டியில் விளையாடுவேன். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிகம் கவனம் செலுத்த போகிறேன். இது நீண்ட காலத்துக்கு பிறகு எடுத்த மிக கடினமான முடிவு.. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டேன்'' என்று கூறி இருந்தார் விராட் கோலி.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதனால் கோலியின் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ''இந்த ஐ.பி.எல் சீசன் முடிந்தவுடன், பெங்களுரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக போகிறேன். ஒரு வீரராக அணியில் தொடருவேன்'' என்று ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மற்றோரு அதிர்ச்சி கொடுத்தார் இந்திய கேப்டன். கோலி இந்த முடிவை கூறியவுடன் இதை சுற்றி பல்வேறு கருத்துக்கள் உலா வாருகின்றன.

பல கருத்துக்கள்

பல கருத்துக்கள்

டி20 உலக்கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிப்பட்டுள்ளார். இந்த உலககோப்பைக்கு பிறகும் தோனி ஆலோசகராக இருந்தால், அவருக்கும் நமக்கும் ஒத்து வராது என்று கருதியே கோலி டி20 கேப்டன் பொறுப்பை துறப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், சமீபகாலமாக கோலி சரியாக பேட்டிங் ஆடாததால். பேட்டிங்கில் கவனம் செலுத்தும் பொருட்டு இந்திய கிரிக்கெட் வாரியமே அவரை வற்புறுத்தி கேப்டன் பதவியை விலக வைத்ததாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இதுபோக இந்த ஐ.பி.எல் சீசனிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்தால், கேப்டன் பதவியை பறித்து விடுவார்கள். ஆனால் இந்த அவமானத்தை தவிர்க்கும் பொருட்டு கோலி முன்கூட்டியே பதவி விலக முடிவு எடுத்ததாக தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இந்த தகவல் அனைத்தும் உண்மையில்லை என்கிறார் கோலியின் தனிப்பட்ட பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இது தொடர்பாக கோச் ராஜ்குமார் சர்மா கூறுகையில், 'கோலி மூன்று வகையான போட்டியில் கேப்டனாக இருப்பதால், அவருக்காவோ அல்லது குடும்பத்திற்காகவோ அவரால் நேரம் செலுத்த முடியவில்லை. இதனால்தான் அவர் டி20 கேப்டன் பதவியை துறக்கிறார். பி.சி.சி.ஐ.யிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை; வேறு ஏதும் காரணமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

Story first published: Monday, September 20, 2021, 15:28 [IST]
Other articles published on Sep 20, 2021
English summary
Coach of Virat Kohli has said that Kohli has decided to step down as T20 captain to spend time with his family. he added that There was no pressure from the BCCI; There is no other reason
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X