For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு..!- ரோகித் சர்மாவுக்கு புதிய பொறுப்பு..!! - பி.சி.சி.ஐ. அதிரடி

மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டி-20 போட்டிகள், ஐ.பி.எல். தொடரிலிருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேப்டனாக தொடர்வேன் என்று அறிவித்தார்.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

கோலியின் வெற்றி

கோலியின் வெற்றி

இந்திய அணியின் கேப்டனாக 95 போட்டிகளில் விராட் கோலி செயல்பட்டுள்ளார். இதில் இந்திய அணி 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளது. இந்த பட்டியலில் தோனி 110 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆனால், தோனியை விட வெற்றி சதவிகதத்தில் விராட் கோலியே அதிகமாக உள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை என்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2019 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை என முக்கிய தொடர்களில் விராட் கோலி கோட்டைவிடுவதாகவும், ஐ.பி.எல். தொடரிலும் அவரது தலைமையிலான அணி ஒரு கோப்பையையும் வெல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்தது.

அழுத்தம்

அழுத்தம்

விராட் கோலியின் கேப்டன் பொறுப்புகளால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு, அது அவரது பேட்டிங்கையும் பாதிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்தார். இதன் காரணமாக தான் அவருடைய கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு மட்டுமே சொந்தமாகும்.

Recommended Video

Dravid-Kohliக்கு பறந்த அவசர கடிதம்! Selectorsன் Announcement என்ன? | OneIndia Tamil
புதிய கேப்டன்

புதிய கேப்டன்

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்தே ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி20 போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற முறைக்கு பயிற்சியாளர் டிராவிட்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Wednesday, December 8, 2021, 21:31 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Virat kohli removed from ODI captaincy Due to not winning the ICC Championship. BCCI decided to appoint Rohit sharma as a new captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X