என்ன ஆனாலும் சிங்கம் சிங்கம்தான்.. 51 வயதிலும் அசத்தலாக பவுலிங் போட்ட வாசிம் அக்ரம்!

Posted By:

இஸ்லாமாபாத்: வாசிம் அக்ரம், இந்தப் பெயர் ஜென் இசட்டிற்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஜென் ஒய்க்கு தெரிந்து இருக்கும்.

இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி கலக்கிக் கொண்டு இருந்த போது பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம் கலக்கிக் கொண்டு இருந்தார். இவர் வேகப்பந்தை சமாளிக்கவே பலர் தனியாக பயிற்சி எடுத்தார்கள்.

சிங்கங்கள் எத்தனை கிழ சிங்கங்களாக இருந்தால் என்ன, அந்த பலம் அப்படியேதான் இருக்கும். அப்படித்தான் தற்போது நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் மிகவும் சிறப்பான ஓவர் ஒன்றைப் போட்டு விக்கெட் எடுத்து இருக்கிறார்.

ஓய்வு பெற்றார்

ஓய்வு பெற்றார்

வாசிம் அக்ரம் 2002ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடமே ஒருநாள் போட்டியில் இருந்தும் ஒய்வு பெற்றார். பலரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த நிகழ்வு காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருந்தார்கள்.

விளையாடினார்

விளையாடினார்

இந்த நிலையில் தற்போது 51 வயதில் இவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 14 வருடத்திற்குப் பின் இப்போதுதான் களம் இறங்கி உள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் உள்ள ஓர் அணியான முல்தான் சுல்தான் அணி நடத்திய போட்டியில் இவர் விளையாடி இருக்கிறார்.

ஜாலியான விளையாட்டு

ஜாலியான விளையாட்டு

இந்தப் போட்டி நட்பு ரீதியாக நடத்தப்பட்டது. பல நாட்கள் கழித்து ஆடியதால் மிகவும் சந்தோசமாக வாசிம் அக்ரம் ஆடினார். அதேபோல் இன்னும் அதே வேகத்துடன் கண்ணாடி அணிந்து பந்து வீசினார்.

விக்கெட் எடுத்தார்

முக்கியமாக எதிர் அணிக்காக விளையாடிய சோயப் மாலிக்கிற்கு கடினமான பந்துகள் வீசினார். பல பந்துகளை அவர் மிஸ் செய்தார். அவரைப் பார்த்து சிரித்துவிட்டு அடுத்த பந்திலேயே அவரை விக்கெட் எடுத்தார். இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

Story first published: Wednesday, February 7, 2018, 12:42 [IST]
Other articles published on Feb 7, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற