விராட் கோலி கிரேட்... ஆனால் ரோகித் சர்மாவின் ஆட்டம்தான் பிடிக்கும்- முன்னாள் பாக். வீரர்

இஸ்லாமாபாத்: இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் அழகானது என்றும் அவரது தனிப்பட்ட பேட்டிங்கை பார்ப்பதற்கு, தான் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியில் தொடர்ந்து சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் முதலில் சுனில் கவாஸ்கர், பிறகு சச்சின் டெண்டுல்கர் தற்போது விராட் கோலி சிறப்பாக விளையாடுவதாகவும் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டி -விராட் கோலி கிரீன் சிக்னல்

இந்திய வீரர் குறித்து சிலாகிப்பு

இந்திய வீரர் குறித்து சிலாகிப்பு

பாகிஸ்தானின் மூத்த வீரர் ஜாகீர் அப்பாஸ் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார். வசீத் கானுடன் கிரிக்கெட் பாஸ் என்ற யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் ஆட்டம் பிடிக்கும்

ரோகித் சர்மாவின் ஆட்டம் பிடிக்கும்

இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தையே தான் அதிகமாக ரசித்து பார்ப்பதாக ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

விராட்டிடம் இல்லை...

விராட்டிடம் இல்லை...

மைதானத்தில் எதிரணியினரின் பந்துகளை லாவகமாக கையாளும் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஸ்டைல் அழகானது என்று கூறியுள்ள ஜாகீர் அப்பாஸ், அவரது ஆட்டம் தனக்கு திருப்தியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஸ்டைல் விராட் கோலியிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

"டிவியை நிறுத்த மாட்டேன்"

இந்திய அணியின் முதுகெலும்பாக கேப்டன் விராட் கோலி திகழ்வதாகவும் ரோகித் மற்றும் விராட் கோலி ஆடும்போது தான் டி.வி.யை நிறுத்தாமல் பார்ப்பேன் என்றும் ஜாகீர் அப்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரர்கள் உருவாக்கம்

சிறந்த வீரர்கள் உருவாக்கம்

இந்திய அணி தற்போது சரியான தளத்தில் இயங்கிவருவதாக தெரிவித்த ஜாகீர் அப்பாஸ் இந்தியா எப்போதும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வருவதாக பாராட்டியுள்ளார்.

கவாஸ்கர்... சச்சின்... கோலி...

கவாஸ்கர்... சச்சின்... கோலி...

இந்தியாவில் எப்போதும் சிறந்த வீரர்கள் உருவாகி வருவதாக கூறிய ஜாகீர் அப்பாஸ், முதலில் சுனில் கவாஸ்கர், பிறகு சச்சின் டெண்டுல்கர் தற்போது விராட் கோலி என்று சிறந்த வீரர்கள் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூத்த, இளம் வீரர்கள் இணைந்து செயல்

மூத்த, இளம் வீரர்கள் இணைந்து செயல்

பாகிஸ்தானில் உள்ளதுபோல இல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும், வீரர்களுக்குள் பொறாமை இல்லாமல் மூத்த மற்றும் இளம் வீரர்கள் இணைந்து செயலாற்றுவதாகவும் ஜாகீர் மேலும் குறிப்பிட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit Sharma's Strokeplay is very satisfying to Watch - Zaheer Abbas
Story first published: Tuesday, January 14, 2020, 13:52 [IST]
Other articles published on Jan 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X