ஆறடி உயரம்.. கருப்புதான்.. முடிஞ்சா விக்கெட் எடுங்க பாஸ்.. கரீபியன்கள் செய்யும் ஐபிஎல் புரட்சி!

Posted By:

சென்னை: தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் எப்போது போல கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் இருக்கும் ஏதாவது ஒரு மேற்கிந்திய தீவு வீரர்தான் அந்த அணியை கடைசியில் வெற்றி பெற வைக்கிறார்.

ஒரு காலத்தில் உலகம் வெள்ளையர்களால் ஆளப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கருப்பின மக்கள் விடுதலை அடைந்தார்கள். இங்கிலாந்துகாரர்களின் கிரிக்கெட் போட்டியில் கால்பதிக்க தொடங்கினார்கள். இதோ இப்போது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் உலகையே வாய்பிளக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

கீழே இருந்தவர்கள் மேலே வரும் போது எவ்வளவு வீரியமாக இருப்பார்கள் என்பதற்கு தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் மூன்று மேற்கு இந்திய தீவு வீரர்கள் சிறந்த உதாரணம். ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் பேசிய அரசியலை இவர்கள் கிரிக்கெட் மட்டையின் மூலம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

பொடியன் சுனில் நரேன்

பொடியன் சுனில் நரேன்

மேற்கிந்திய தீவுகள் அணியில் இருக்கும் வீரர்களுக்கு உரிய எந்த உடல் வாகும் இல்லாத வீரர்தான் சுனில் நரேன். ஆனால் இந்த ஐபிஎல் தொடர் அவருக்கானது, பவுலிங் பேட்டிங் என அனைத்திலும் அவர் இந்த முறை மிக சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்தில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். நேற்றைய போட்டி வரை இவர் நல்ல பார்மில்தான் இருக்கிறார். இந்த தொடரில் இவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன் ஆண்ட்ரு ரசல்

டிராகன் ஆண்ட்ரு ரசல்

சென்னை கொல்கத்தா மோதும் போட்டி. அந்த அணி சென்னை பவுலிங்கில் திணறும் போது கடைசி நேரத்தில் வந்த ஆண்ட்ரு ரசல். ''நீ எப்படி போட்டாலும் அடிப்பேன். உங்களுக்கு பிராவோனா, கேகேஆருக்கு நான்'' என்று டயலாக் மட்டும்தான் சொல்லவில்லை. இன்னும் பல ஐபிஎல் போட்டிகள் பேச கூடிய ஆட்டம் அது. 11 சிக்ஸர்கள், 1 பவுண்டரி, 36 பந்துகளுக்கு 88 ரன்கள். பாதாளத்தில் இருந்த கொல்கத்தாவை 202 ரன்கள் எடுக்க வைத்தார். கடைசியில் சென்னை வீரர்களே வந்து பாராட்டும் வகையில் இருந்தது அவரது ஆட்டம்.

சிஎஸ்கே பிராவோ

சிஎஸ்கே பிராவோ

இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை விளையாடும் முதல் போட்டி, நடப்பு சாம்பியன் மும்பையை எதிர்த்து அவர்கள் சொந்த ஊரில் நடக்கும் போட்டி, இத்தனை பரபரப்புகளுக்கு இடையில்தான் பிராவோவின் அந்த அதிரடி ஆட்டம் அரங்கேறியது. முதலில் இறங்கிய மும்பை 20 ஓவரில் 165 ரன்கள் எடுத்தது. அடுத்த வந்த சென்னை தொடக்கத்தில் இருந்து சொதப்பியது. ஆனால் கடைசியில் வந்தார், அந்த கருப்பு காலா பிராவோ. அவர் மொத்தம் பிடித்தது 5 ஓவர்கள். 30 பந்துகள். எடுத்ததோ 68 ரன்கள். 7 சிக்ஸ், 3 பவுண்டரி என்று பேயாட்டம் ஆடினார். அதற்கு அடுத்த போட்டியிலும் சென்னையை வெற்றி பெற வைக்க அவரிடம் ஏற்பட்ட கடைசி நேர பதற்றம் இருக்கிறதே... சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோ!

வருவான் வான் வருவான்

வருவான் வான் வருவான்

ஆனால் இத்தனை சிங்கங்கள் இருந்தாலும், இன்னொரு வான வேடிக்கை காட்டும் கரீபியன் புயல் பஞ்சாப் அணியில் இன்னும் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருக்கிறார். பந்துகளை பறக்க விடும் கிறிஸ் கெயில் அடுத்த போட்டியில் யுவராஜ் சிங் இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இறக்கப்படும்பட்சத்தில், இந்த ஐபிஎல் போட்டியில் இன்னொரு பிளாக் பந்தரின் அதிரடியை பார்த்துவிட முடியும்.

பிரச்சனை

பிரச்சனை

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வீரர்கள் எல்லோரும், அவர்கள் சொந்த நாட்டு கிரிக்கெட் போர்டால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். சரியான சம்பளம் இல்லை, நல்ல பார்மில் இருந்தாலும் மரியாதை இல்லை என்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இந்தியா வந்து, எதோ ஒரு மாநில அணியை வெற்றிபெற வைத்து, இவர்கள் போடும் குத்தாட்டம்.. ஒரு ஜாலி வாழ்க்கை பாடம்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
West Indies players giving their best in every IPL matches.
Story first published: Sunday, April 15, 2018, 11:10 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற