For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் ஷர்மா சதமும், உடைபட்ட சாதனைகளும்!

By Veera Kumar

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியால், சில சாதனைகள் தகர்க்கப்பட்டுள்ளன. முக்கியமான ரோகித் ஷர்மாவின் ரன் குவிப்பு பல புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளது. அந்த சாதனை துளிகளை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் இன்று பெர்த் நகரில் நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ரோகித் ஷர்மா அபாரமாக ஆடி 171 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருவரும் 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 207 ரன்களை குவித்தனர்.

பெர்த்தில் முதல் வீரர்

பெர்த்தில் முதல் வீரர்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த், டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித் ஷர்மா.

யுவராஜை முந்தினார்

யுவராஜை முந்தினார்

ஆஸ்திரேலிய மண்ணில், ஒருநாள் போட்டியொன்றில், அதிகபட்ச ரன் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது. முன்பு, 2004ல், சிட்னியில், யுவராஜ்சிங் 139 ரன்கள் விளாசியிருந்தது பெஸ்ட்டாக இருந்தது.

பெர்த்தில் 2வது பெரிய ஸ்கோர்

பெர்த்தில் 2வது பெரிய ஸ்கோர்

ரோகித் விளாசிய 171 ரன் என்பது பெர்த் மைதானத்தில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இந்த மைதானத்தில் 178 ரன்கள் அடித்து இப்பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவர்

ஆயிரத்தில் ஒருவர்

இப்போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்களை அவர் கடந்தார். 19 போட்டிகளில் இந்த ரன்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

லட்சுமணனுடன் பங்கு

லட்சுமணனுடன் பங்கு

ஆஸ்திரேலிய மண்ணில், 3 செஞ்சுரிகள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில், லட்சுமணனுடன், ரோகித் ஷர்மா ஒரே இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடிச்சா 150தான்

அடிச்சா 150தான்

ரோகித்ஷர்மா மொத்தம் 4 முறை 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சம் என்பது உலக சாதனை ரன்னான 264 ஆகும். கிறிஸ் கெயில், சனத் ஜெயசூர்யா ஆகியோரும் 4 முறை 150 ரன்களை கடந்த சாதனையாளர்கள். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 5 முறை இச்சாதனையை செய்து முதலிடத்திலுள்ளார்.

அதிக சதங்கள்

அதிக சதங்கள்

ரோகித் ஷர்மா மொத்தம் விளாசியுள்ள 9 சதங்களில், 4 சதங்கள் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. லட்சுமணனும் ஆஸி.க்கு எதிராக 4 சதங்கள் அடித்துள்ளார். இந்திய வீரர்களில் சச்சின்தான் ஆஸி.க்கு எதிராக 9 சதங்கள் விளாசி முதலிடத்திலுள்ளார். ரோகித் மற்றும் லட்சுமணனுக்கு இதில் இரண்டாவது இடம்.

சிம்ம சொப்பனம்

சிம்ம சொப்பனம்

இன்றைய போட்டியில் 2வது விக்கெட்டுக்கு ரோகித்-கோஹ்லி இணைந்து 207 ரன்களை குவித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு இந்திய வீரர்கள் குவித்த அதிகபட்ச ரன் இது. முன்னதாக 2001ம் ஆண்டு இந்தூரில் சச்சின்-லட்சுமணன் இணைந்து, 199 ரன்கள் குவித்திருந்தனர்.

பலே பார்ட்னர்ஷிப்

பலே பார்ட்னர்ஷிப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்துள்ளது என்பது, சர்வதேச அளவில், 3வது உச்சபட்ச ஸ்கோராகும்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய வீரர்கள் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் ரன் குவித்திருப்பது, இது 2வது முறையாகும். முன்னதாக, சிட்னியில், 2004ம் ஆண்டு, யுவராஜ்சிங்-லட்சுமணன் இணைந்து 213 ரன்கள் பார்னர்ஷிப் உருவாக்கியிருந்தனர்.

அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா குவித்த அதிகபட்ச ஸ்கோர் என்பது, இன்றைய ஆட்டத்தில் சேர்த்த 309 ரன்கள்தான். முன்பு, 2004ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த போட்டியில், இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாகும்.

Story first published: Tuesday, January 12, 2016, 13:19 [IST]
Other articles published on Jan 12, 2016
English summary
Before the start of the ODI series against Australia, India's opening batsman Rohit Sharma had said he will be "innovative" and will be "fighting fire with fire". And he did the same in the series opener today and set records.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X