சூப்பர் பிளான் பாஸ்.. அஸ்வினை சென்னை விட்டுக்கொடுத்ததற்கு காரணம் இதுதானா ?

Posted By:
அஸ்வினை இதனால் தான் சென்னை விட்டு கொடுத்துச்சாம் பாஸ்...வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டியில் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பலரும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

போட்டி

போட்டி

ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை எடுக்க பெரிய போட்டி நிலவியது. முக்கியமாக சென்னை அணி கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால் பஞ்சாப் அணி விடாப்பிடியாக தொடர்ந்து வந்தது.

எத்தனை கோடி

எத்தனை கோடி

இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. பஞ்சாப் அணி இவரை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு எடுத்துள்ளது.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

இது பெரிய சர்ச்சை ஆனது. சென்னை அணி இப்படி அஸ்வினை விட்டு கொடுத்து இருக்க கூடாது என்று கூறினார்கள். பலரும் அஸ்வின் என்றால் டோணி அணிதான் என்று முடிவாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்

தமிழ்

அதேபோல் சென்னை அணியில் தமிழர்கள் இல்லை என்றும் கூறப்பட்டது. தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது. இதுவும் அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அறிவிப்பு

முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.

பிளான்

பிளான்

தற்போது சென்னை அணி வேண்டும் என்றேதான் அஸ்வினை விட்டு கொடுத்தது என்று கூறப்படுகிறது. அவருக்கு கேப்டன் வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிந்தே இப்படி விட்டு கொடுத்ததாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால்தான் அவருக்கு அதிக தொகை கொடுக்க சென்னை முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Story first published: Tuesday, February 27, 2018, 13:35 [IST]
Other articles published on Feb 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற