For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், தோனி சிறந்த வீரர்கள் இல்லையா? அப்ரிடியின் “போங்கு” ஆட்டம்.. நியாயம் கேட்கும் ரசிகர்கள்!

இஸ்லாமாபாத் : சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி சிறந்த வீரர்களை கொண்ட தனது உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்தார்.

உலகின் சிறந்த உலகக்கோப்பை வீரர்கள் பெயர்கள் இடம் பெற வேண்டிய இந்த அணியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் - கேப்டன் தோனியின் பெயரும் இடம்பெறவில்லை.

இனி சிஎஸ்கே கேப்டன் தோனி இல்லை.. ரெய்னா தான்! தீயாய் பரவும் வதந்தி.. உண்மை என்ன? இனி சிஎஸ்கே கேப்டன் தோனி இல்லை.. ரெய்னா தான்! தீயாய் பரவும் வதந்தி.. உண்மை என்ன?

சச்சினுக்கு இடமில்லை

சச்சினுக்கு இடமில்லை

இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். உலகக்கோப்பை தொடரில் 44 இன்னிங்க்ஸ்களில் 2278 ரன்கள் குவித்துள்ளார் சச்சின். அவரது சராசரி 56.95 ஆகும். 6 சதம், 16 அரைசதம் அடங்கும். அவருக்கு தன் சிறந்த வீரர்கள் அடங்கிய உலகக்கோப்பை அணியில் இடம் தரவில்லை அப்ரிடி.

தோனியும் இல்லை

தோனியும் இல்லை

அதே போல, ஒரு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பினிஷரான தோனிக்கும் தன் அணியில் இடம் அளிக்கவில்லை அப்ரிடி. அப்புறம் யாருக்குத் தான் இடம் கொடுத்துள்ளார்?

ஒரே ஒரு இந்தியர்

ஒரே ஒரு இந்தியர்

அப்ரிடி அறிவித்துள்ள சிறந்த உலகக்கோப்பை அணியில் 5 வீரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 4 வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். போனால் போகிறது என தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து தலா ஒரு வீரருக்கு தன் அணியில் இடம் கொடுத்துள்ளார்.

அப்ரிடியின் அணி

அப்ரிடியின் அணி

அப்ரிடியின் உலகக்கோப்பை அணி - சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜாக்கஸ் காலிஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்கிராத், ஷேன் வார்னே, ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக்.

கோலி உள்ளே.. சச்சின் வெளியே

கோலி உள்ளே.. சச்சின் வெளியே

இந்த அணியில் தோனிக்கு இடம் கொடுக்காதது கூட பரவாயில்லை. சச்சினுக்கு இடம் இல்லை என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஒருவேளை, இந்தியர்கள் என்ற கோட்டாவில் விராட் கோலியை சேர்த்து விட்டு, சச்சினை கழற்றி விட்டு விட்டாரோ?

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இன்சமாம் உல் ஹக்கை விட சச்சின் சிறந்த பேட்ஸ்மேன். இந்த நிலையில், சச்சினுக்கு இடம் அளிக்காமல் உலகின் சிறந்த அணி தேர்வு செய்தது போங்கு ஆட்டம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அப்ரிடியை வசை பாடி வருகிறார்கள்.

Story first published: Thursday, May 2, 2019, 22:41 [IST]
Other articles published on May 2, 2019
English summary
World cup 2019 : Shahid Afridi picked his World Cup XI without Sachin Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X