"துண்டு ஒரு தடவதான் தவறும்" அலறிய போலாந்து அணி.. எகிறி அடித்த அர்ஜென்டினா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தோஹா: போலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா - போலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆனால் போலாந்து அணி டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் ரசிகர்களிடையே இந்த ஆட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது?? கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

அர்ஜென்டினா அட்டாக்

அர்ஜென்டினா அட்டாக்

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அட்டாக் மேல் அட்டாக் செய்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெரும்பாலான நேரம், போலாந்து அணிகளின் 10 வீரர்களும் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டனர். அந்த அளவிற்கு அர்ஜென்டினா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பலனாக 37வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

 மிஸ் செய்த மெஸ்ஸி

மிஸ் செய்த மெஸ்ஸி

அந்த பெனால்டியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடிக்க, அதனை போலாந்து அணியின் கோல் கீப்பர் செஷ்னி சிறப்பாக தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்தும் அர்ஜென்டினா கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், போலாந்து கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. இதனால் முதல் பாதி ஆட்ட நேரம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணி முதல் கோல் அடித்து அசத்தியது. அர்ஜென்டினா அணியின் ஆலிஸ்டர் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலாந்து அணி கோல் அடிக்க வேண்டிய நிலை வந்தது. அதற்கேற்ப போலாந்து அணியும் அட்டாக்கை தொடங்கியது. ஆனால் அதனை அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

பாய்ந்து அடித்த அர்ஜென்டினா

பாய்ந்து அடித்த அர்ஜென்டினா

தொடர்ந்து சில நிமிடங்களில் அர்ஜென்டினா அணி அமைதியாக பந்தை தங்களுக்குள் பாஸ் செய்து ஆதிக்கம் செலுத்த, 67வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஆல்வரஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கம் அதிகரித்தது.

சிக்கலில் போலாந்து

சிக்கலில் போலாந்து

இதனிடையே போலாந்து அணி மேலும் ஒரு கோல் வாங்கினால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த போலாந்து ரசிகர்கள் மெக்சிகோ - சவுதி அரேபியா ஆட்டம் பற்றிய அப்டேட்டை செல்ஃபோனில் பார்த்துக் கொண்டே இருந்தனர். இதனிடையே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ் தவறவிட்டார்.

வாழ்வா? சாவா?

வாழ்வா? சாவா?

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் 6 நிமிடங்களில் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, கோல் லைனில் இருந்து போலாந்து வீரர்கள் தடுத்தனர். இறுதியாக அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டம் தொடங்கும் போது அர்ஜென்டினா அணிக்கு வாழ்வா - சாவா என்று இருந்த நிலை, ஆட்டம் முடியும் போது போலாந்து அணிக்கு வாழ்வா - சாவா என்று மாறியது.

போலாந்து முன்னேற்றம்

போலாந்து முன்னேற்றம்

தொடர்ந்து சவுதி அரேபியா அணியை மெக்சிகோ 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றிபெற்றாலும், தொடரில் அடிக்கப்பட்ட கோல்களின் அடிப்படையில் போலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா மற்றும் போலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அடுத்த போட்டியில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியாவையும், போலாந்து அணி பிரான்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
கணிப்புகள்
VS
English summary
Argentina beat Poland 2-0 to advance to the next round of the World Cup. In the Next round Argentina take on Australia. Poland take on world champions France
Story first published: Thursday, December 1, 2022, 2:56 [IST]
Other articles published on Dec 1, 2022

Latest Videos

  + More
  + மேலும்
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X