உயிருக்கு போராடும் பீலே.. கால்பந்து ஜாம்பவானை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்.. வெளியான அறிக்கை!

ஸா பாலோ: பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கால்பந்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில் அணிக்காக வென்று கொடுத்தவர் பீலே. கால்பந்து உலகின் கடவுள் என்ற் போன்றப்படும் பீலே, 17 வயதில் உலகக்கோப்பையை வென்றவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர் என்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் சூழலில், 1958, 1962, 1970 களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பீலேவின் சாதனை ரசிகர்களிடையே ஆச்சரியத்துடன் நினைவு கூறப்பட்டு வருகிறது.

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது?? கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

பீலே உடல்நிலை

பீலே உடல்நிலை

82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதன்பின்னர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் பீலே

மருத்துவமனையில் பீலே

இதனால் கால்பந்து ஜாம்பவான் பீலே அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் திடீரென பீலே, ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பீலேவுக்கு பெரிய பிரச்சினைகள் இல்லை. விரைவில் வீடு திரும்புவார் என்று அவரது மகள் சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்திருந்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை அறிக்கை

இந்த நிலையில் பீலேவின் உடல்நிலை மீண்டும் மோசமான சூழலுக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான நோய்த்தடுப்பு பிரிவுக்கு பீலே மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பாப்பே ட்வீட்

எம்பாப்பே ட்வீட்

பீலேவுக்கு வழங்கப்பட்டு வந்த கீமோதெரபி சிகிச்சை பலனளிக்காத வகையில், மருத்துவமனை தரப்பில் வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் பீலேவின் ரசிகர்கள் பலரும் பீலேவுக்கு பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளார். இதனிடையே பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே, Pray for the King என்று பீலே மீண்டு வருவதற்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
Brazil football Legend Pele has been shifted to the palliative care, which is meant for patients with potentially life threatening diseases and end-of-life care.
Story first published: Saturday, December 3, 2022, 21:53 [IST]
Other articles published on Dec 3, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X