"பேரதிசயம்" 5 உலகக்கோப்பையில் கோல் அடித்த ஒரே வீரர்.. ரொனால்டோ படைத்த அசைத்த முடியாத சாதனை!

தோஹா: ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை என்று பேச்சு ரசிகர்களிடையே தொடங்கியது. ஏனென்றால் 37 வயதாகும் ரொனால்டோ, அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச கால்பந்து தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேற்றம், செல்போன் சர்ச்சை, ஒப்பந்தம் இல்லாத நட்சத்திர வீரர், ஆட்டத்தில் பின்னடைவு என்று ரொனால்டோவை குறை சொல்வதற்காக ஏகப்பட்ட கண்கள் கூர்ந்து நோக்கின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்த நிலையில் கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

5வது உலகக்கோப்பை

5வது உலகக்கோப்பை

அதுமட்டுமல்லாமல் இந்த கோலை அடித்ததன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோ, 2006ல் ஒரு கோல், 2010ல் ஒரு கோல், 2014ல் 1 கோல், 2018ல் 4 கோல் என மொத்தம் 7 கோல்கள் அடித்திருந்தார். தற்போது நடப்பு உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் 5வது உலகக்கோப்பையில் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இதுவரை மெஸ்ஸி, பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் 4 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்து சாதித்திருந்தனர். தற்போது அனைவரின் சாதனையையும் முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை படைத்துள்ளார்.

அடுத்த சாதனை

அடுத்த சாதனை

அதேபோல் போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை புகழ்பெற்ற வீரர் யூசிபியோ உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இதனை முறியடிக்க, ரொனால்டோவுக்கு இன்னும் இரண்டு கோல் தேவைப்படுகிறது. இந்த கத்தார் உலகக்கோப்பை தொடரிலேயே அதனை ரொனால்டோ முறியடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
ஃபிஃபா உலககோப்பை கணிப்புகள்
VS
English summary
Cristiano Ronaldo became the first player to score in five World Cup tournament. Before the start of the FIFA World Cup series, the talk started among the fans that Portugal star Cristiano Ronaldo's last World Cup.
Story first published: Friday, November 25, 2022, 0:34 [IST]
Other articles published on Nov 25, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X