மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ - ஜூவண்டஸ் விட்டு வெளியேறியது ஏன்?

போர்ச்சுகல்: ஜூவண்டஸ் அணியை விட்டு வெளியேறி, மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோ திரும்பியிருப்பது தான் இன்றைய கால்பந்து உலகின் ஹாட் டாபிக்.

ஆம்! தன்னை சீராட்டி பார்த்து பார்த்து வளர்த்த மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்புகிறார் ரொனால்டோ. இத்தனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2020 LIVE: எட்டும் தூரத்தில் தங்கம் - சாதனை படைப்பாரா பவினா படேல்?டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2020 LIVE: எட்டும் தூரத்தில் தங்கம் - சாதனை படைப்பாரா பவினா படேல்?

ஆனால், அவர் ஏன் ஜூவண்டஸ் அணியை விட்டு விலகினார்? என்ற கேள்வியும், சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.

மெஸ்ஸி vs ரொனால்டோ

மெஸ்ஸி vs ரொனால்டோ

இன்றைய நவீன கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்களில் மிக முக்கியமானவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தில் இரு பாட்ஷாக்களில் ஒருவர். அதாவது மெஸ்ஸி vs ரொனால்டோ. ரியல் மேட்ரிட் கிளப்பில் அவர் படைக்காத சாதனைகள் இல்லை. அடிக்காத கோல்கள் இல்லை. தனது 18ஆவது வயதில் தேசிய சீனியர் அணியில் தடம் பதித்த ரொனால்டோவை, 2003 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனியர் கிளப் அணிகளில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே, இளம் வயதில் பெருந்தொகைக்கு ஒப்பந்தமானவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் ரொனால்டோ.

அதிக கோல்

அதிக கோல்

2009ஆம் ஆண்டு வரை அந்தக் கிளப்பில் விளையாடிய கிறிஸ்டியானோ, 292 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்திருந்தார். அப்போதுதான் அவர் சூப்பர் ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார். இதனால், அவரை வாங்க பல அணிகள் மல்லுக்கட்டின. இறுதியில், ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப், இந்திய மதிப்பில் சுமார் 694 கோடி ரூபாய்க்கு அவரை ஒப்பந்தம் செய்தது. ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக 451 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, அந்த கிளப் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். மேலும் மேட்ரிட் அணியில் விளையாடிய காலகட்டத்தில் 4 முறை கால்பந்து உலகின் உயரிய விருதான பேலான் டி ஆர் (Ballon d'Or) விருதையும் வென்றார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு

12 ஆண்டுகளுக்கு பிறகு

பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ. ஜூவண்டஸ் அணிக்காக விளையாடிய வீரர்களிலே அதிகவேகமாக 100 கோல்களை அடித்தவர் என்ற சாதனையும் அங்கு நிகழ்த்தினார் ரொனால்டோ. இந்நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரிமியர் லீக் போட்டிகளில் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட்டில் இணைகிறார் ரொனால்டோ. ஆம்! மீண்டும் தனது தாய் அணியுடன் இணைகிறார் ரொனால்டோ.

ஏன் திடீர் வெளியேற்றம்?

ஏன் திடீர் வெளியேற்றம்?

பரஸ்பரம் பிரிகிறார்கள் அவ்வளவு தான். ஜூவண்டஸ் அணியுடனான ஒப்பந்தத்தில் ஒரு வருடம் மீதமுள்ள நிலையில், ரொனால்டோ தனது அடுத்த பெரிய ஒப்பந்தத்தை விரும்புகிறார் என்றே அர்த்தம். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் தனது சூழ்நிலையை புரிந்து மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரியல் மாட்ரிட் அணி தங்களின் மிகச்சிறந்த கோல் அடித்த வீரர் ராஜினாமா செய்வதை கருத்தில் கொள்ளவில்லை என்று சுற்றப்பட்ட கதைகளுக்கான பதிலாக இது அமைந்தது.

அற்புதமான கிளப்

அற்புதமான கிளப்

இந்த மாற்றம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரொனால்டோ, "இன்று நான் ஒரு அற்புதமான கிளப்பில் இருந்து புறப்படுகிறேன். வெளியேறுகிறேன். இந்த கிளப் இத்தாலியில் மிகப்பெரியது. நிச்சயமாக ஐரோப்பாவின் மிகப்பெரியது. நான் என் இதயத்தையும் ஆன்மாவையும் ஜுவென்டஸிற்காக கொடுத்தேன், எனது இறுதி நாட்கள் வரை நான் எப்போதும் டூரின் நகரத்தை நேசிப்பேன்." டிஃபோசி பியான்கோனரி "என்னை எப்போதும் மதிக்கிறார், ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு போட்டியிலும் அவர்களுக்காக போராடி அந்த மரியாதைக்கு நன்றி சொல்ல முயற்சித்தேன்" என்று ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார்.

ரொனால்டோ உருக்கம்

ரொனால்டோ உருக்கம்

மேலும், "இறுதியில், நாம் அனைவரும் திரும்பிப் பார்த்தால், நாம் என்ன பெரிய விஷயங்களை சாதித்தோம் என்பதை உணர முடியும், நாம் விரும்பிய அனைத்தையும் அல்ல, ஆனால் இன்னும், நாங்கள் ஒன்றாக ஒரு அழகான கதையை எழுதினோம். நான் எப்போதும் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் இப்போது என் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், ஏனென்றால் நான் உங்களுடைய ஒரு பகுதியாக உணர்கிறேன். இத்தாலி, ஜூவ், டுரின், டிஃபோசி பியான்கோனரி, நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள்" என்று ரொனால்டோ உருக்கமுடன் எழுதினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
கணிப்புகள்
VS
English summary
Ronaldo exit from Juventus joins Manchester United -ரொனால்டோ
Story first published: Saturday, August 28, 2021, 13:19 [IST]
Other articles published on Aug 28, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X