ப்ளே -ஆப் சுற்றிற்கு போராடும் ஐதராபாத் அணி... மோஹுன் பகன் அணிக்கு எதிராக போட்டி!

வாஸ்கோடகாமா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 103வது போட்டி வாஸ்கோடகாமாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்த இரு அணிகளும் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் முதல் மற்றும் 4வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

103வது போட்டி

103வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 103வது போட்டி வாஸ்கோடகாமாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் மற்றும் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

வெற்றிக்கான அவசியம்

வெற்றிக்கான அவசியம்

ஐதராபாத் அணி இதுவரை விளையாடியுள்ள 18 போட்டிகளில் 27 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சியும் ஐதராபாத் அணியும் ஒரே புள்ளிகளுடன் காணப்படும் நிலையில் ஐதராபாத் அணி ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேற இன்னும் ஒரு போட்டியில் வெற்றி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

லீக் வின்னர்ஸ் கோப்பைக்கு தீவிரம்

லீக் வின்னர்ஸ் கோப்பைக்கு தீவிரம்

இதையடுத்து இன்றைய போட்டியில் வெற்றி கொள்ள ஐதராபாத் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல முதலிடத்தில் உள்ள எடிகே மோஹுன் பகன் அணி அதே 18 போட்டிகளில் விளையாடி 39 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் முதலிடத்தை தக்க வைத்து லீக் வின்னர்ஸ் கோப்பையை வெற்றி கொள்ள தீவிரம் காட்டுகிறது.

வெற்றிபெற மோஹுன் பகன் தீவிரம்

வெற்றிபெற மோஹுன் பகன் தீவிரம்

மோஹுன் பகன் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை சிட்டி அணிகளுக்கிடையில் இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் காணப்படுகிறது. இதையடுத்து மோஹுன் பகன் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இன்றைய போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஜியோ டிவியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
European Championship கணிப்புகள்
VS
English summary
Hyderabad FC will be targeting nothing less than a win to inch closer to a playoff spot
Story first published: Monday, February 22, 2021, 20:58 [IST]
Other articles published on Feb 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X