For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அடேங்கப்பா 82 நாடுகளில் ஐஎஸ்எல் ஒளிபரப்பாக போகுதா! சூப்பரப்பு... சூப்பரப்பு!

கோவா : இந்திய சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடர் நாளை துவங்கவுள்ளது. இந்த தொடர் முழுவதும் கோவாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சர்வதேச அளவில் 5 ஒளிபரப்பு நிறுவனங்கள் இணைந்து உலகெங்கிலும் 82 நாடுகளில் இந்த தொடரை ஒளிபரப்ப உள்ளன.

உலகெங்கிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி கால்பந்தாட்ட ரசிகர்களும் ஐஎஸ்எல் தொடரை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 கோவாவில் நாளை துவக்கம்

கோவாவில் நாளை துவக்கம்

ஐஎஸ்எல் 2020 -21 தொடர் நாளை துவங்கவுள்ளது. இந்த தொடர் முழுவதும் கோவாவில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதையடுத்து டிவி மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் இந்த போட்டிகளை ரசிகர்கள் காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 11 அணிகள்... 115 போட்டிகள்

11 அணிகள்... 115 போட்டிகள்

இந்த தொடரில் கொல்கத்தா ஜியண்ட்ஸ் மோஹுன் பகன் மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. மொத்தம் 115 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பு

ஸ்டார் நெட்வொர்க் இந்தியாவில் இந்த தொடரை ஒளிபரப்ப உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், தமிழில் நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. மேலும் சர்வதேச அளவில் 5 ஒளிபரப்பு நிறுவனங்கள் இணைந்து 82 நாடுகளில் இந்த ஹீரோ ஐஎஸ்எல் 7வது சீசனின் போட்டிகளை டிவியில் ஒளிபரப்ப உள்ளன.

 உலகளவில் ரசிகர்கள்

உலகளவில் ரசிகர்கள்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவின் ஐஎஸ்எல் தொடருக்கு இந்தியர்கள் மட்டுமின்றி கால்பந்தாட்ட ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களை ஐஎஸ்எல் சென்றடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அமெரிக்கா, கனடாவில் இஎஸ்பிஎன்

அமெரிக்கா, கனடாவில் இஎஸ்பிஎன்

5 ஒளிபரப்பு நிறுவனங்கள் இணைந்து 82 பிரதேசங்களில் இந்த சேவையை வழங்கவுள்ள நிலையில், இஎஸ்பிஎன், அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐஎஸ்எல் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது. இதேபோல பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப உள்ளது.

 தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்

தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்

தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் 1ப்ளே ஸ்போர்ட்சும், அல்பேனியா, அர்மேனியா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் யுப் டிவியும் நேரலையாக ஐஎஸ்எல் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளன. டிஜிட்டல் பிஎன்ஜி மூலம் பிஜி, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்எல் ஒளிபரப்பாக உள்ளது.

 மத்திய கிழக்கு நாடுகளில் ஒளிபரப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஒளிபரப்பு

இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளில் ஏசியாநெட் ப்ளஸ், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வங்கதேசத்தில் ஜல்சா மூவிஸ் எஸ்டி மற்றும் ஜல்சா மூவிஸ் எச்டி மூலம் மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசத்திலும் ஐஎஸ்எல் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளன.

Story first published: Thursday, November 19, 2020, 18:39 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
5 international partners bring India’s premier football league to fans across globe
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X