For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"கம்பேக்னா இப்படி இருக்கனும்" அசால்ட் காட்டிய மெஸ்ஸி.. மெக்சிகோவை அதிர வைத்த அர்ஜென்டினா!

தோஹா: மெக்சிகோ அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக லயோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்ற பேச்சு தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. அதனால் உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டும் என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆசையை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆனால் சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல் மெக்சிகோ அணி போலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது.

அர்ஜென்டினா - மெக்சிகோ

அர்ஜென்டினா - மெக்சிகோ

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரின் குரூப் சி போட்டியில் உள்ள மெக்சிகோ அணியை எதிர்த்து அர்ஜென்டினா விளையாடியது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் தொடங்கியது முதலே, மெக்சிகோ அணி ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது. கிட்டத்தட்ட ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக ஃபவுல்கள் செய்தது.

முதல் கோல்

முதல் கோல்

இருப்பினும் அர்ஜென்டினா அணி தரப்பில் பெரிதாக அட்டாக் செய்யப்படவில்லை. முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மட்டுமே இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடியது. ஆனால் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மெஸ்ஸி அடுத்த முதல் கோல்

மெஸ்ஸி அடுத்த முதல் கோல்

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அர்ஜென்டினா அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. அர்ஜென்டினா அணியின் வீரர்கள் வலது பக்கம், இடது பக்கம் என மாறி மாறி தொடர்ந்து அட்டாக் செய்தனர். இதன் பலனாக அர்ஜென்டினா அணியின் டீ மரியா சரியாக கணித்து மெஸ்ஸிக்கு கடத்திய பாஸை, மெஸ்ஸி தனது ஸ்டைலில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன்பின்னர் மைதானமே ஒட்டுமொத்தமாக மெஸ்ஸி, மெஸ்ஸி என்று ஆர்ப்பரித்தது.

அர்ஜென்டினா தடுப்பாட்டம்

அர்ஜென்டினா தடுப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து மெக்சிகோ அணி வேறு வழியின்றி அட்டாக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் அர்ஜென்டினா அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்தனர்.

2வது கோல்

2வது கோல்

இதனைத் தொடர்ந்து எதிர்பாராத நேரத்தில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஷார்ட் கார்னரில் இருந்து ஃபெர்னான்டெஸ் அர்ஜென்டினா அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் கோல்கள் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Story first published: Sunday, November 27, 2022, 2:42 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Argentina won 2-0 in the World Cup football match against Mexico. Messi, Fernandez scores Goal against Mexico.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X