For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒலிம்பிக் கால்பந்து போட்டி: எகிப்தை 3-2 கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்

Football
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. அதேபோல ஐக்கிய அரபு எமிரேட் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் உருகுவே வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து-கேபான், இங்கிலாந்து-செனகல் அணிகள் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. ஆனால் கால்பந்து போட்டிகள் 2 நாட்களுக்கு முன்னதாக துவங்கியது. இதில் நேற்று ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் துவங்கியது.

லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நேற்று 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் பிரேசில், எகிப்து அணிகள் மோதின.

பரபரப்பான போட்டியில் பிரேசில் அணி துவக்க முதலே அதிரடியாக ஆடியது. போட்டியின் 16வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரபாயல் ஒரு கோலை அடித்தார். அதன்பிறகு 26வது நிமிடத்தில் பிரேசில் வீரர் டாமியோ 2வது கோலை அடித்தார். அடுத்த 4 நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மார் ஒரு கோலை அடித்தார்.

போட்டியின் முதல் பாதியில் பிரேசில் அணி 3 கோல்களை அடிக்க கதிகலங்கிய எகிப்து 2வது பாதியில் அதிரடியாக விளையாடியது. 2வது பாதியின் 52வது நிமிடத்தில் எகிப்து வீரர் முஹ்மது அபவுற்றிகா ஒரு கோலை அடித்தார். அதன்பிறகு தொடர்ந்து அதிக்கம் செலுத்திய எகிப்து அணிக்கு 76வது நிமிடத்தில் 2 கோல் அடிக்கப்பட்டது. எகிப்தி வீரர் முஹ்மது சலா 76வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.அதன்பிறகு எகிப்து அணியினால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முடிவில் பிரேசில் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் உருகுவே, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் மோதின. போட்டியின் 23வது நிமிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட் வீரர் இஸ்மாயில் மதார் முதல் கோலை அடித்தார். அதற்கு பதிலாக, போட்டியின் 42வது நிமிடத்தில் உருகுவே வீரர் ரமிரேஸ்ம் ஒரு கோலை அடித்தார்.

இந்த நிலையில் 56வது நிமிடத்தில் உருகுவே வீரர் லோடிரோ 2வது கோலை அடித்தார். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட் அணியினரால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து போட்டியின் முடிவில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் பெலராஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் போட்டியின் 45வது நிமிடத்தில் பெலராஸ் வீரர் ஒரு கோலை அடித்தார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் போட்டியின் முடிவில் பெலராஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின. இதில் போட்டியின் 20வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பெல்லாமி ஒரு கோல் அடித்தார். இதற்கு பதில் கோலாக 82வது நிமிடத்தில் செனகல் வீரர் கொநேட் ஒரு கோல் அடித்து சமநிலைப்படுத்தினார். இதனால் போட்டியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

அதேபோல பி பிரிவை சேர்ந்த கேபான், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, போட்டி டிராவில் முடிந்தது.

Story first published: Friday, July 27, 2012, 17:17 [IST]
Other articles published on Jul 27, 2012
English summary
Gold-medal favorite Brazil scored 3 goals in the first-half and 3-2 win over Egypt in its opening Group C match of the men's Olympic football tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X