தாய் நாடு மீதான பாசம்.. கோல் அடித்ததும் கொண்டாடாத சுவிஸ் வீரர்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தோஹா: கேமரூன் அணிக்கு எதிராக கோல் அடித்த எம்போலோ, எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடாதது ஏன் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த கோலை சுவிட்சர்லாந்து அணியின் முக்கிய வீரர் எம்போலோ, ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பதிவு செய்திருந்தார். இந்த ஒரு கோல் சுவிட்சர்லாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கொண்டாடாத எம்போலோ

கொண்டாடாத எம்போலோ

இதனிடையே கோல் அடித்த பின்னர் எம்போலோவின் செயலின் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் முதல் கோலை அடித்த பின், எம்போலோ எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. மீண்டும் அடுத்த கோல் அடிப்பதற்கான பணியை தொடங்கினார். இதற்கான காரணம் அறியாமல் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குழம்பினர்.

கேமரூனை சேர்ந்த எம்போலோ

கேமரூனை சேர்ந்த எம்போலோ

இந்த நிலையில் எம்போலோ கொண்டாட்டத்தில் ஈடுபடாததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. 25 வயதான எம்போலோ, கேமரூன் நாட்டில் பிறந்தவர். இருப்பினும் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது இளம் வயதில் அவரின் குடும்பம் கேமரூன் நாட்டில் இருந்து பிரான்ஸ் வந்துள்ளது. பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதனால் கேமரூன் அணிக்கு எதிராக இன்றையப் போட்டியில் அவர் கோல் பதிவு செய்ததும், இருகரம் கூப்பி அப்படியே அமைதியாக அந்த சூழலை கடந்தார். அதுமட்டுமல்லாமல் தன் கைகளை முகத்திலும் வைத்துக் கொண்டார். தாய் நாட்டுக்கு எதிராக கோல் அடித்ததால், எம்போலோ கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்

சகோதரர்

இதுகுறித்து கேமரூன் அணியின் பயிற்சியாளர் ரிகோபெர்ட் சாங் கூறுகையில், எம்போலோ பற்றி நன்றாக அறிவேன். நாங்கள் இருவரும் சகோதரர்கள் போன்றவர்கள். தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறோம். நாங்கள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுவதால், எங்கள் இருவருக்கும் பாசம் இல்லை என்று இல்லை.

எனக்கு பெருமை

எனக்கு பெருமை

கோல் அடித்த பின் எம்போலோ கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. கால்பந்து விளையாட்டின் இன்னொரு பக்கம் இது. எம்போலோ நினைத்து பெருமை கொள்கொள்கிறேன். அவர் எங்கள் அணிக்காக விளையாடி இருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
ஃபிஃபா உலககோப்பை கணிப்புகள்
VS
English summary
There is confusion among the fans as to why Mbolo did not engage in any kind of celebration after scoring against Cameroon.
Story first published: Thursday, November 24, 2022, 23:18 [IST]
Other articles published on Nov 24, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X