For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'முத்துப் பல்லழகன்' ரொனால்டோவின் சாதனையை 'குளோஸ்' செய்த மிரஸ்லோவ்!

பிரேசிலியா: பிரேசில் சாம்பியன் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதநையை சமன் செய்துள்ளார் ஜெர்மனியின் சூப்பர் ஸ்டார் மிரஸ்லோவ் குளோஸ்.

மொச்சைக் கொட்டை பல்லழகன் ஆன ரொனால்டோ உலகக் கோப்பை போட்டிகளில் 15 கோல்கள் அடித்து சாதனையாளராக திகழ்ந்து வந்தார்.

அதை நடப்பு போட்டித் தொடரில் சமன் செய்து விட்டார் குளோஸ். இந்த சாதனைக்கு முதல் ஆளாக ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கானாவுக்கு எதிராக

கானாவுக்கு எதிராக

கானாவுக்கு எதிரான போட்டியின்போது இந்த சமன் சாதனையைப் படைத்தார் குளோஸ்.

சூப்பர் கோல் இல்லை என்றாலும் கூட

சூப்பர் கோல் இல்லை என்றாலும் கூட

குளோஸ் ஸ்டைல் கோல் இது இல்லை என்ற போதிலும் கூட இந்த கோல் சாதனைக்கு வித்திட்ட வகையில் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார் குளோஸ்.

காயத்துடன் ஆடியும்

காயத்துடன் ஆடியும்

இந்தப் போட்டியில் சப்ஸ்டிடியூட் வீரராகத்தான் களம் இறங்கினார் குளோஸ். காரணம் காயம். இருந்தபோதிலும், உள்ளே வந்த 2 நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தி விட்டார்.

கடைசி உலகக் கோப்பையில் முதல் கோல்

கடைசி உலகக் கோப்பையில் முதல் கோல்

இது குளோஸுக்கு கிட்டத்தட்ட கடைசி உலகக் கோப்பைத் தொடராகும். மேலும் நடப்புத் தொடரில் அவர் போட்ட முதல் கோலும் இதுதான்.

வெல்கம் குளோஸ்

வெல்கம் குளோஸ்

குளோஸ் தனது சாதனையைச் சமன் செய்ததை அடுத்து அவருக்கு ஆங்கிலம், போர்ச்சுகீஸ், ஜெர்மன் ஆகிய 3 மொழிகளில் வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்தார் ரொனால்டோ. வெல்கம் டூ தி கிளப் என்பதே அந்த வாழ்த்து வாசகம்.

செம வீரர் ரொனால்டோ

செம வீரர் ரொனால்டோ

பிரேசில் கண்ட பிரமாதமான வீரர்களில் ஒருவர்தான் ரொனால்டோ. தனது கிளப் அணிக்காகவும், பிரேசில் அணிக்காகவும் வெற்றிகரமாக விளையாடிய சாதனையாளறும் கூட. 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் நட்சத்திர நாயகனாக ஜொலித்தவரும் கூட.

3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு

3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு

தற்போது 37 வயதுதான் ஆகிறது ரொனால்டோவுக்கு. ஆனால் 34 வயதிலேயே ஓய்வ பெற்று விட்டார். தற்போது தனது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

Story first published: Sunday, June 22, 2014, 14:10 [IST]
Other articles published on Jun 22, 2014
English summary
Miroslav Klose scored his 15th FIFA World Cup goal in the match against Ghana to equal Ronaldo's record at the biggest stage. The botched front flip was not vintage Miroslav Klose, but the critical goal that led to it was definitely a classic Klose poach. Even if he is now an injury-prone, 36-year-old substitute, playing for Germany still brings out the essential man in him, and less than two minutes after he trotted onto the field in Fortaleza, Klose smelled an opportunity and pounced.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X