For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜார்ஜுக்கு நீதி வேண்டும்.. டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா போர்க்கொடி

டோக்கியோ: ஜார்ஜ் பிளாய்டு பச்சைப் படுகொலை வருத்தம் தருகிறது. இந்த மரணம் மிகவும் அநீதியானது. இதற்கு நிச்சயம் நீதி வேண்டும் என்று ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார்.

ஹைதி நாட்டு தந்தைக்கும்- ஜப்பான் தாய்க்கும் பிறந்தவரான நவோமி, ஜப்பானுக்காக டென்னிஸ் ஆடி வருகிறார். குவாரன்டைன் காலம் என்பதால் தனது சமூக வலைதளங்களில் ஜாலியான புகைப்படங்களைப் போட்டு வந்தவர் தற்போது மிகவும் சீரியஸான போஸ்ட்டுகளுக்கு மாறியுள்ளார்.

காரணம், கருப்பர் இனத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொடூரமாக அமெரிக்க போலீஸாரால் கொல்லப்பட்ட சம்பவம்தான். நவோமியின் தந்தையும் கருப்பர் இனத்தவர்தான் என்பதால் கூடுதல் கவலையுடனும், கோபத்துடனும் இருக்கிறார் நவோமி.

முடிவுக்கு வருது முடக்கம்.. ஜூன் இறுதியில் கையைக் காலை நீட்டி பிராக்டிக்ஸ்.. தயாராகும் கோலி அன் கோமுடிவுக்கு வருது முடக்கம்.. ஜூன் இறுதியில் கையைக் காலை நீட்டி பிராக்டிக்ஸ்.. தயாராகும் கோலி அன் கோ

அமைதி களைய வேண்டும்

அமைதி களைய வேண்டும்

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ஒரு புதிய பதிவில், அமைதியாக இருப்பதும் கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான். நான் அமைதியாக இருக்க விரும்பவில்லை. எனக்கு நடக்கவில்லை என்பதால் நான் அமைதியாக இருக்க முடியாது. நம்மைச் சுற்றிலும் நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம் மெளன சாட்சியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஜார்ஜ் கொலைக்கு நீதி தேவை

ஜார்ஜ் கொலைக்கு நீதி தேவை

கடைகளை கருப்பர் இனத்தவர் சூறையாடுவதாக செய்திகள் படிக்கும் முன்பு, ஒரு நிராயுதபாணியான கருப்பர் ஒருவர் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பதை படியுங்கள். ஏன் அந்தக் கொலை என்று கேள்வி கேளுங்கள். அதற்கு நீதி வேண்டும் முதலில். ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி வேண்டும். ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நீதி தேவை.. இதுதான் நமது முதல் குரலாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நவோமி.

மைக்கேல் ஜோர்டான் கோபம்

மைக்கேல் ஜோர்டான் கோபம்

ஏற்கனவே கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான், பார்முலா ஒன் சாம்பின் லூயிஸ் ஹாமில்டன் உள்ளிட்டோரும் ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நான் ஆத்திரமாக இருக்கிறேன் என்று மைக்கேல் ஜோர்டான் கோபமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஜார்ஜ் பிளாய்டு மரணத்தால் அமெரிக்காவே அதிர்ந்து போயிருக்கிறது.

பெரும் கலவரம்

பெரும் கலவரம்

விளையாட்டுத்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு துறையினரும் அமெரிக்க வெள்ளையர் போலீஸாரால் நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அங்கு கலவரங்களும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்க முடியாமல் போலீஸார் தள்ளாடி வருகின்றனர்.

Story first published: Tuesday, June 2, 2020, 17:46 [IST]
Other articles published on Jun 2, 2020
English summary
Japanese Tennis sensation Naomi Osaka has supported the protests Death of an African-American man
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X