For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு “முதல் தங்கப்பதக்கம்”.. ஈட்டி எறிதல்.. நீரஜ் சோப்ராவின் அசுர வேகம்!

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று ஆட உள்ளார்.

Recommended Video

Neeraj Chopra wins first-ever athletics Gold! History Created in Olympics | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இன்றைய தினத்தில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது. இன்று காலை கோல்ஃப் விளையாட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அதிதி 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். பெரிது எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

ஆடவர் மல்யுத்தம்.. சொல்லி அடித்த இந்தியாவின் பஜ்ரங் புனியா.. வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்! ஆடவர் மல்யுத்தம்.. சொல்லி அடித்த இந்தியாவின் பஜ்ரங் புனியா.. வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்!

ஆனால் மல்யுத்த போட்டியில் அதனை சரி செய்தார் பஜ்ரங் புனியா. ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவுக்கான வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஈட்டி எறிதல் போட்டி

ஈட்டி எறிதல் போட்டி

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று ஆட உள்ளார். இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் நம்பிக்கை

இந்தியாவின் நம்பிக்கை

இந்த ஒலிம்பிக்கில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் நீரஜ் சோப்ரா. இவரின் அசாத்திய ஃபார்மினால் கண்டிப்பாக ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துவிடும் என்ற அளவிற்கு பேசப்பட்டது. அதற்கேற்றார் போலவே அவரின் ஒலிம்பிக் என்ட்ரியும் இருந்தது என்றே கூறலாம். ஒலிம்பிக்கில் நடந்த தகுதி சுற்றில் மிக எளிதாக நீரஜ் சோப்ரா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு சென்றார்.

வியப்பூட்டும் ஃபார்ம்

வியப்பூட்டும் ஃபார்ம்

தகுதி சுற்றின் முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இதன் மூலம் இரண்டாவது சுற்று, காலிறுதி, அரையிறுதி செல்லாமல், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே அசத்தி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 2 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது முதல் சுற்றில் ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதில் அவர்கள் வீசும் அதிகபட்ச தூரத்தை கணக்கிட்டு டாப் 8 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். அந்த வகையில் தனது முதல் சுற்றில் 87.30 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். மேலும் டாப் 8 வீரர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

டாப் 8

டாப் 8

அந்த வகையில் தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். மேலும் டாப் 8 வீரர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றிலும் அதே வேகத்தை தொடர்ந்து காட்டினார். அவர், இந்த முறை 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் இது அவரின் அதிகபட்ச தூரமானது. முதல் 2 சுற்றுகளில் அதிவேகமாக நீரஜ் சோப்ரா வீசி வந்த நிலையில் 3வது சுற்றில் அவரின் வேகம் சற்று குறைந்தது. அவரால் 76.79 மீ தூரம் மட்டுமே வீச முடிந்தது. எனினும் அவரின் 87.58 மீ என்ற அதிகபட்ச இலக்கை யாராலும் எட்ட முடியாததால் நீரஜ் தொடர்ந்து முதலிடம் வகித்தார். இதனால் டாப் 8 இடங்களுக்குள் சென்றார்.

தங்கம்

தங்கம்

4வது சுற்றின் போது நீரஜ் சோப்ரா, போட்டி கோட்டை தாண்டி காலினை வைத்ததால் இதில் அவர் ஃபௌல் ஆனார். எனினும் அவரின் தூரமே தொடர்ந்து முதலிடம் வகித்தது. 5வது சுற்றின் போது அவர் மிகவும் உயரமாக வீசி விட்டதால் அவரின் ஈட்டி குறைந்தபட்ச தூரத்தை அடையவில்லை. 6வது மற்றும் கடைசி சுற்றிலாவது நீரஜின் தூரத்தை விட அதிக தூரம் வீசி விடலாம் என பல வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை. இறுதியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Story first published: Saturday, August 7, 2021, 18:42 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
India's Neeraj Chopra won Gold medal In Jawlin Throw in Tokyo Olympics 2020, India's First gold in this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X