இனிமே இந்த மாதிரி படம் தான் வரும்.. பார்த்து தான் ஆகணும்! விளையாட்டாக கல்லா கட்டப் போகும் கோலிவுட்!

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் SPORTS படங்கள் | HIT or FLOP | V-connect |FILMIBEAT TAMIL

சென்னை : சமீப காலமாக தமிழ் சினிமாவில் விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பேய்ப் படங்கள், காமெடி படங்கள், ரவுடி ஹீரோ படங்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வகையான படங்களே தமிழ் சினிமாவை ஆக்ரமித்து இருக்கும்.

அந்த வரிசையில் சமீப காலமாக "ஸ்போர்ட்ஸ் படம்" என்று ஒரு புதிய சினிமா வரிசை உருவாகி உள்ளது. இதை வைத்து அடுத்த சில ஆண்டுகளுக்கு கல்லா கட்ட திட்டம் போட்டு இருக்கிறது கோலிவுட்.

அந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி.. தல தீபாவளி! ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்!

இளைஞர்களை கவர முயற்சி

இளைஞர்களை கவர முயற்சி

இதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவை பார்க்க வரும் மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் தான். அவர்களை விளையாட்டு என்ற விஷயத்தை வைத்து கவரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

சக் தே இந்தியா தாக்கம்

சக் தே இந்தியா தாக்கம்

அது உருவாக காரணம் தமிழ் சினிமா இல்லை. பாலிவுட் தான் என தோன்றுகிறது. ஹிந்தியில் மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து, ஷாரூக் கான் நடித்த "சக் தே இந்தியா" திரைப்படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தங்கல் ஹிட்

தங்கல் ஹிட்

அதைத் தொடர்ந்து அங்கே வருடத்திற்கு சில விளையாட்டை மையமாக கொண்ட படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதன் உச்சகட்டமாக அமைந்தது அமீர் கான் நடித்த "தங்கல்". மல்யுத்தத்தை மையமாக கொண்ட இந்த திரைப்படம், இந்தியாவை தாண்டி சீனாவிலும் அதிரி, புதிரி ஹிட். வசூலும் டாப் டக்கர்.

தோனி வரலாறு

தோனி வரலாறு

அடுத்து வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியா முழுவதும் பெரிய வெற்றியை பெற்றது. அது டாகுமெண்டரி போல இல்லாமல், ஒரு கமர்சியல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம் பெற்று இருந்ததால் தான் ஹிட் அடித்தது.

அடுத்த மார்க்கெட் இதுதான்

அடுத்த மார்க்கெட் இதுதான்

இதையெல்லாம் பார்த்த கோலிவுட், இனி "ஸ்போர்ட்ஸ் படம் தான் அடுத்த மார்க்கெட்" என்ற முடிவுக்கு வந்துள்ளது போல தெரிகிறது. ஆனால், இந்த காலகட்டத்துக்கு முன்பே தமிழ் சினிமாவில் விளையாட்டு தொடர்பான படங்கள் வந்துள்ளன. வெற்றியும் பெற்றுள்ளன.

முந்தைய ஸ்போர்ட்ஸ் படங்கள்

முந்தைய ஸ்போர்ட்ஸ் படங்கள்

விஜய் நடித்த கில்லி, கபடி சார்ந்த படம் என்றாலும் அது ஸ்போர்ட்ஸ் படமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அடுத்து கால்பந்து தொடர்பான லீ என்ற திரைப்படம் வந்தது. அது வெற்றி பெறவில்லை. இடையே எம்.குமரன் படம் குத்துச்சண்டை படமாக வெளிவந்து வெற்றி பெற்றது.

வெண்ணிலா கபடிக் குழு

வெண்ணிலா கபடிக் குழு

அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு பெரிய வெற்றியை பெற்று, அதில் நடித்த அனைவருக்கும் புதிய வாழ்க்கையை அளித்தது. அதே சுசீந்திரன் ஜீவா, கென்னடி கிளப் என பல ஸ்போர்ட்ஸ் படங்களை இயக்கி விட்டார். அடுத்தும் சாம்பியன் என்ற கால்பந்து தொடர்பான படத்தை இயக்கப் போகிறார்.

கடந்த சில ஆண்டுகளில்..

கடந்த சில ஆண்டுகளில்..

கடந்த சில ஆண்டுகளில் எதிர்நீச்சல், ஜீவா, பூலோகம், நட்பே துணை, கனா, இறுதி சுற்று, ஈட்டி, கென்னடி கிளப், என பல ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்து விட்டன. இவற்றில் பல படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றன.

அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் படங்கள்

அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் படங்கள்

இந்த நிலையில், அடுத்தும் நிறைய ஸ்போர்ட்ஸ் படங்கள் வெளியாக உள்ளன. சொல்லப் போனால், இனி சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா ரசிகன் ஸ்போர்ட்ஸ் படங்களை பார்த்து தான் ஆக வேண்டும். என்னென்ன ஸ்போர்ட்ஸ் படங்கள் அடுத்து வர உள்ளன?

அடுத்து வர உள்ள படங்கள்

அடுத்து வர உள்ள படங்கள்

அருண் விஜய் நடிப்பில் பாக்சர், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன், விஜய் நடிக்கும் பிகில், "பரியேறும் பெருமாள்" கதிர் நடிக்கும் ஜடா, ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் அடுத்து வர உள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
What is the reason behind Sports movies are increasing in tamil?
Story first published: Saturday, September 14, 2019, 12:48 [IST]
Other articles published on Sep 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X