Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games History: All Editions, Host Cities, Winners, Medal Tally & Records

Aichi-Nagoya 2026

சீனாவின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. விறுவிறுப்பான விளையாட்டு, இணக்கமான ஆசியா என்ற கருப்பொருளுடன் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. முதலில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டுகள் - கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அடுத்த ஆண்டான, 2026 க்கு ஒத்திவைக்கப்பட்டது. சீனாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.45 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம், சீனா தனது உள்கட்டமைப்பு மற்றும் வெற்றிகரமான சர்வதேச போட்டியை நடத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Jakarta and Palembang 2018

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் ஜகார்த்தா மற்றும் பலேம்பாங் நகரங்களில் நடத்தப்பட்டது. 40 விளையாட்டுகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஆசியாவின் ஆற்றல் என்ற கருப்பொருளுடன், இந்தோனேசியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் வகையிலான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அதேபோல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

Incheon 2014

17வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரத்தில் நடைபெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 9,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பன்முகத்தன்மை இங்கு ஒளிர்கிறது என்ற முழக்கத்துடன், இந்த விளையாட்டுகள் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடின. ஆசியப் போட்டிகள் மூலமாக இன்சியான் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்தது.

Guangzhou 2010

ஏசியாட் என்று அழைக்கப்படும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீனாவின் குவாங்சூ நடத்தியது. இதில் நடத்தப்பட்ட 42 விளையாட்டுகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 9,700க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதேபோல் திரில்லிங் கேம்ஸ், இணக்கமான ஆசியா என்று தீம்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இது ஆசிய நாடுகளிடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தியது.

Doha 2006

2006ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நகரம் என்ற பெருமையைப் கத்தாரின் நோஹா பெற்றது. 45 நாடுகளைச் சேர்ந்த 9,520 விளையாட்டு வீரர்கள் 39 விளையாட்டுகளில் பங்கேற்றனர். தி கேம்ஸ் ஆஃப் யுவர் லைஃப் என்ற கருப்பொருளில் ஆசிய போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தார் நாடு இதற்காக உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்து, அதிநவீன அரங்குகள் மற்றும் வசதிகளை உருவாக்கியது. இந்த விளையாட்டுகள் கத்தாரின் உலகளாவிய விளையாட்டு மையமாக மாறுவதற்கான லட்சியத்தை வெளிப்படுத்தியது.

Busan 2002

14வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்றது. இதில் 44 நாடுகளைச் சேர்ந்த 7,711 தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஒற்றுமைக்கான கனவு என்ற கருப்பொருளுடன், இந்த விளையாட்டுகள் ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்நிகழ்ச்சியானது, தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் மற்றும் தென் கொரியாவின் தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்தியது. இந்த விளையாட்டுகள் ஆசிய நாடுகளிடையே கலாச்சார புரிதலையும் நட்பையும் மேம்படுத்த உதவியது.

Bangkok 1998

13வது ஆசியப் போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் 41 நாடுகளைச் சேர்ந்த 6,554 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஆசியப் போட்டிகள் போதுமான பொருளாதாரம் என்ற கருப்பொருளை மையாக வைத்து நடத்தப்பட்டது. அதேபோல் எண்ணற்ற வித்தியாசமான விளையாட்டுகள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கும் வகையில் ஏராளமான நாடுகள் பங்கேற்றன. இதன் மூலம் தாய்லாந்து நாடாலும் ஆசியப் போட்டிகளை நடத்த முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு பறைச்சாற்றியது.

Hiroshima 1994

எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற கருப்பொருளை வலியுறுத்தி, 12வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் ஹிரோஷிமா நகரத்தில் நடத்தியது. 42 நாடுகளைச் சேர்ந்த 6,828 விளையாட்டு வீரர்கள் 34 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்தியது. ஹிரோஷிமாவின் வரலாற்று முக்கியத்துவம் நிகழ்வுக்கும் ஆழம் சேர்த்தது. ஜப்பான் அதன் கடந்த காலத்தை மதிக்கும் அதே வேளையில் அதன் முன்னேற்றத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

Beijing 1990

11வது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை சீனா பெற்றது. பெய்ஜிங் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் 36 நாடுகளைச் சேர்ந்த 6,122 விளையாட்டு வீரர்களை 27 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்நிகழ்வு சீனாவின் நவீனமயமாக்கல் மற்றும் சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தியது. அதேபோல் விளையாட்டுப் போட்டிகளும் மகத்தான வெற்றியைப் பெற்றன. அதுமட்டுமல்லாமல் சர்வதேச விளையாட்டுகளில் சீனாவின் எழுச்சியும் தொடங்கியது.

Seoul 1986

10வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. மொத்தமாக 25 விளையாட்டுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த 4,839 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுகள் 1988 சியோல் ஒலிம்பிக்கிற்கு முன்னோடியாக இருந்து ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதன் மூலம் சியோல் நகரம் நவீனமயமாக்கல் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளுக்கான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,ஆசிய நாடுகளின் வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆசிய நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளால் வகைப்படுத்தப்பட்டன.

New Delhi 1982

9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியது. டெல்லியில் நடைபெற்ற ஆசியப் போட்டிகள் தொடரில் 33 நாடுகளைச் சேர்ந்த 3,411 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் வரவேற்றனர். இந்த விளையாட்டுகள் மூலம் இந்தியா தனது வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. மொத்தமாக 21 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு இந்தத் தொடரில் நடத்தப்பட்டன

Bangkok 1978

8வது ஆசியப் போட்டிகளை நடத்தியதன் மூலம் மூன்று முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய முதல் நகரமாக பாங்காக் பெருமை பெற்றது. 25 நாடுகளில் இருந்து 3,842 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இது பாங்கால்க் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் விளையாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தியது. விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஒரு நிகழ்வில் சேர்க்கப்பட்டனர். இது அடுத்தடுத்த ஆசியப் போட்டிகளில் அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்க வழி வகுத்தது.

Tehran 1974

7வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 3,010 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுகளில் மின்னணு ஸ்கோர்போர்டுகள் மற்றும் ஊக்கமருந்து சோதனைகள் போன்ற பல புதுமைகளை அறிமுகப்படுத்தின. இருப்பினும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் சில நாடுகளின் புறக்கணிப்புகள் நிகழ்வின் வெற்றியை சற்று மறைத்தன.

Bangkok 1970

1970ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகள் தென் கொரியாவில் நடத்துவதாக இருந்தது. ஆனால் நிதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் பாங்காக்கில் நடத்தப்பட்டன. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 2400 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு 14 விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தாய்லாந்து தனது சர்வதேச நற்பெயரை மேம்படுத்தி, நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அதன் நிர்வாக திறன்களை வெளிப்படுத்தியது.

Bangkok 1966

5வது ஆசிய விளையாட்டுப் போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 9 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது. 20 நாடுகளைச் சென்றடைந்த இந்த நிகழ்வு விளையாட்டுத் திறன் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது. தடகள விளையாட்டுகள் மூலம் பல்வேறு ஆசிய நாடுகளை ஒன்றிணைப்பதில் விளையாட்டின் பங்கை பாங்காக் சிறப்பாக மேற்கொண்டிருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் செபக் தக்ரா போன்ற நிகழ்வுகளைச் சேர்ப்பது, விளையாட்டின் புதிய அம்சங்களைத் தழுவி பாரம்பரியத்தைக் கொண்டாடும் நிகழ்வின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

Jakarta 1962

4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது. இந்தோனேஷியா இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியதன் மூலமாக சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. வில்வித்தை மற்றும் கூடைப்பந்து அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பங்கேற்பாளர்கள் அதிகமாகினர். 17 நாடுகள் போட்டியிட்ட நிலையில், ஜகார்த்தாவின் நிகழ்வு நட்புரீதியான போட்டியை ஊக்குவித்தது. அதேபோல் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கான ஒரு தளமாக வெளிப்படுத்தப்பட்டது.

Tokyo 1958

3வது ஆசியப் போட்டிகள் தொடர் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் பங்கேற்றன. இந்த விளையாட்டுக்கள் ஆசியாவின் விளையாட்டுத் துறையில் வளர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்தின. இதில் ஜூடோ மற்றும் கூடைப்பந்து போன்ற புதிய விளையாட்டுகள், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையைக் காட்டுவதாக அமைந்தது.

Manila 1954

1954ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஆசிய விளையாட்டு போட்டிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தில் நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 நாடுகள் பங்கேற்றன. இதில் ஆப்கானிஸ்தான், கம்போடியா மற்றும் தென் கொரியா போன்ற புதிய நாடுகளும் இடம்பெற்றன. குத்துச்சண்டை மற்றும் ஷூட்டிங் அறிமுகம் உட்பட பல்வேறு விளையாட்டுகள் புதிதாக இடம்பெற்றது. இந்த ஆசியப் போட்டிகள் கலாச்சார பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த முக்கிய காரணமாகவும் மாறியது.

New Delhi 1951

1951 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லி நகரத்தில் தொடக்க ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு ஆசிய நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கான ஒரு புதிய முயற்சியாக அமைந்தது. விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, நீச்சல், டென்னிஸ் மற்றும் பளு தூக்குதல் போன்ற போட்டிகள் இடம்பெற்றன, பதக்கங்களின் அடிப்படையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் நாடாக உருவெடுத்தது.

Asian Games History FAQs

  • When were the first Asian Games held?
    The first Asian Games were held in New Delhi, India, from March 4 to March 11, 1951.
  • Which country hosted the first Asian Games?
    India hosted the inaugural Asian Games in New Delhi in 1951.
  • How many countries participated in the first Asian Games?
    Eleven countries participated in the inaugural Asian Games held in New Delhi in 1951.
  • Which city has hosted the Asian Games the most times?
    Bangkok has hosted the Asian Games three times, in 1966, 1970 and 1978.
  • Which country has hosted the Asian Games the most times?
    China has hosted the Asian Games three times: Beijing in 1990, Guangzhou in 2010 and Hangzhou in 2023.
  • Which country is the most successful in Asian Games history?
    China is the most successful nation in Asian Games history in terms of overall medal performance and gold medals.
  • How many medals did India win at the 2023 Asian Games?
    India won 107 medals at the Hangzhou 2023 Asian Games, including 28 gold, 38 silver and 41 bronze medals.
  • When will the next Asian Games be held?
    The 2026 Asian Games will be held in Aichi-Nagoya, Japan, from September 19 to October 4, 2026.
  • Where will the Asian Games 2026 be held?
    The 2026 Asian Games will be hosted in Aichi-Nagoya, Japan.
  • How often are the Asian Games held?
    The Asian Games are generally held once every four years.
  • What were the sports in the first Asian Games?
    The first Asian Games featured athletics, basketball, football, swimming, tennis and weightlifting.
  • When did China first participate in the Asian Games?
    China began participating in the Asian Games in 1974 and has since become the dominant nation in the medal standings.
  • When did India host the Asian Games?
    India hosted the Asian Games twice, in New Delhi in 1951 and again in 1982.
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+