For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா வேகம்.. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இவர் தான்.. இளம் வீரரை பாராட்டிய இந்திய ஜாம்பவான்!

மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பின் உம்ரான் மாலிக் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் உம்ரான் மாலிக். ஐபிஎல் தொடரில் மிகவும் எளிதாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசியதால், உம்ரான் மாலிக் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட உம்ரான் மாலிக், இளம் வீரருக்கான மிடுக்கோடு பந்துவீசினார். இதனால் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் லைன் மற்றும் லெந்த் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்.. சச்சின், கும்ப்ளேவுடன் பேசவே பயந்தேன்.. ஓய்வறை ரகசியம் சொன்ன யுவராஜ் சிங்! 20 ஆண்டுகளுக்கு முன்.. சச்சின், கும்ப்ளேவுடன் பேசவே பயந்தேன்.. ஓய்வறை ரகசியம் சொன்ன யுவராஜ் சிங்!

உம்ரான் மாலிக் அசத்தல்

உம்ரான் மாலிக் அசத்தல்

இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உம்ரான் மாலிக் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் என்று அனைவருக்கும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சுனில் கவாஸ்கர் பாராட்டு

சுனில் கவாஸ்கர் பாராட்டு

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் உம்ரான் மாலிக் குறித்து கவாஸ்கர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுனில் கவாஸ்கர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி கருத்து

ரவி சாஸ்திரி கருத்து

சில நாட்களுக்கு முன் உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரின் திறமையை அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளார். அவர் பொறுமையாக இருந்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று தெரிவித்தார்.

யார் இந்த உம்ரான் மாலிக்?

யார் இந்த உம்ரான் மாலிக்?

மூத்த வீரர்கள் உம்ரான் மாலிக்கை பாராட்டி வருவது இவர் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 23 வயதாகும் உம்ரான் மாலிக், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் அடையாளம் காணப்பட்ட இவர், இதுவரை 7 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் களத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 9, 2022, 21:16 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
Former Indian team legend Sunil Gavaskar has said that he is eager to see Umran Malik play after Sachin Tendulkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X