ஐ.பி.எல்: அதிக ரன்கள் எடுத்தது கெய்க்வாட்.. அதிக விக்கெட்டுகள்.. அதிக சிக்ஸர் அடித்தது யார் தெரியுமா

துபாய்: இந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் எடுத்துள்ளார். ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்தார்.

6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்! 6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்!

நடப்பு ஐ.பி.எல் சீசன் 2021-க்கு முடிவுரை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது. இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா பயணித்து வருகிறது.

ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள்

ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள்

இந்த ஐ.பி.எல் சீசன் முழுவதும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதனை விரிவாக காண்போம். ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்படும். இந்த சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் விளாசியுள்ளார். இவருக்கு கடும் டப் கொடுத்த அதே சென்னை அணியின் வீரர் டூ பிளிசிஸ் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள் இவர்தான்

அதிக விக்கெட்டுகள் இவர்தான்

அதாவது சி.எஸ்.கே.வை சேர்ந்த இருவர் ஒரே தொடரில் 600 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதன் முறையாகும். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பெங்களூரு வீரர் ஹர்சல் படேல் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெல்லி வீரர் ஆவேஷ்கான் 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

சதம் விளாசியவர்கள்

சதம் விளாசியவர்கள்

சென்னை வீரர் ருத்ராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பெங்களுருவின் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களில் தேவ்தத் படிக்கல் உள்ளார். அவர் 51 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். மும்பை வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாக உள்ளது.

 ஒரே மேட்சில் அதிக ரன்கள்

ஒரே மேட்சில் அதிக ரன்கள்

ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்தார். அதிக ஸ்டிரைக் ரேட் வைத்தவர்கள் பட்டியலில் ஹெட்மயர் 168.05 என்று முதலிடத்தில் உள்ளார். ஹர்சல் படேல் ஓவரில் ஜடேஜா எடுத்த 37 ரன்களே ஒரே ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன்களாக உள்ளது. இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 2 மெய்டன்களை வீசியுள்ளார். டெல்லி வீரர் ஆவேஷ்கான் 61 ஓவர்கள் வீசி 156 பந்துகளை டாட்(ரன் ஏதும் கொடுக்காத பந்துகள்) பால்களை வீசியுள்ளார். பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் அதிகபட்சமாக 30 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chennai's rudraj gaekwad has scored the most runs this IPL season. Jose Butler is the highest run scorer in a single match. He scored 124 runs in a match
Story first published: Friday, October 15, 2021, 23:14 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X