For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது போட்டியில் ‘ஷாக்’ மாற்றங்கள்… முக்கிய வீரர்கள் இருவர் வெளியில்..? கோலியின் சூப்பர் பிளான்

Recommended Video

IND VS WI : 3RD T20 | 3-வது டி 20 போட்டி: ஒரு முன்னோட்டம்- வீடியோ

கயானா: 3வது போட்டியிலும் வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்கும் என்ற நிலையில் தவானும், ரிஷப் பன்டும் கழற்றிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில், முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வென்றது. முதல் ஆட்டத்தில் 96 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா தடுமாறி, தடுமாறி ஒரு வழியாக வென்றது. 2வது ஆட்டத்திலும் வெற்றி தொடரை கைப்பற்றியது.

இந் திய அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியது. ரோகித் விளாசிய 67 ரன்கள் உதவியுடன் 168 ரன்களை இலக்காக கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன் கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடை பட்டது.

Article 370 : Article 370 : "மகனே" அப்படியே கிளம்பு.. பொங்கி எழுந்த அப்ரிடி.. பொங்கல் வைத்து அனுப்பிய கம்பீர்!

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டு இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு வெற்றிகளால் தொடரை 2க்கு பூஜ்யம் என கைப்பற்றியது.

இந்தியா முனைப்பு

இந்தியா முனைப்பு

இந்திய அணி கடைசி மற்றும் 3வது ஆட்டத்தில் இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசின் கயானாவில் நடக்கிறது.டைபெறுகிறது. இந்த ஆட்டத் திலும் வெற்றி பெற்று தொடரை 3க்கு பூஜ்யம் என முழுமையாக கைப்பற்றுவதில் இந்தியா முனைப்பு காட்டக்கூடும்.

இளம்வீரர்கள்

இளம்வீரர்கள்

தொடரை கைப்பற்றிவிட்டதால் சோதனை அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதனை சூசகமாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கேப்டன் விராட் கோலி. அவர் கூறியதாவது: போட்டியில் ஜெயிப்பதுதான் எங்களுக்கு மிக முக்கியம். 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி விட்டோம். அதனால் புதிய வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளது என்றார்.

இருவரில் ஒருவர்

இருவரில் ஒருவர்

அதன்படி, தொடக்க வீரர்களில் ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவானுக்கு ஓய்வு வழங்கிவிட்டு அந்த இடத்தில் கே.எல். ராகுல் வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் தவான் வெளியில் அமரவைக்கப்படலாம். தோனி இல்லாத நிலையில் அவர் இடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்டும் பெரிதாக சோபிக்கவில்லை.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

எனவே அவரும் கழற்றிவிடப்படுவார் என்று நம்பலாம். பவுலிங்கில் சகோதரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகி யோரில் இருவர் வெளியே அமர வைக்கப்படக் கூடும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வென்றால் தொடரை கைப்பற்ற முடியாது. ஆனால் அடுத்து வரக்கூடிய போட்டிகளுக்கு உத்வேகமாக அமையும்.

Story first published: Tuesday, August 6, 2019, 14:27 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Few major changes in Indian team 3rd T 20 against West Indies, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X