For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஆடுவது முக்கியமல்ல.. நாட்டுக்கு முன்னுரிமை கொடுங்கள்.. சீனியர் வீரர்களை விமர்சித்த மதன் லால்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் மதன் லால் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் காயம் காரணமாக ஏராளமான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஒரே நேரத்தில் குல்தீப் சென், தீபக் சஹர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயமடைந்தனர்.

இப்படி ஐபிஎல் நடத்துறது தப்பு.. பொறாமையில் பொங்கிய பாக். வீரர்கள்.. சரமாரியாக விளாசிய மதன் லால்!இப்படி ஐபிஎல் நடத்துறது தப்பு.. பொறாமையில் பொங்கிய பாக். வீரர்கள்.. சரமாரியாக விளாசிய மதன் லால்!

ரோகித் சர்மா கருத்து

ரோகித் சர்மா கருத்து

இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் வீரர்களுக்கு சில காயம் பிரச்சனைகள் இருக்கிறது. இதன் அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் வெற்றி பெற முடியாது.

100% உடல்தகுதி

100% உடல்தகுதி

இந்திய அணிக்காக விளையாடும்போது 100% உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமர்ந்து ஏன் வீரர்கள் முழு உடல் தகுதி பெறாமல் அணிக்கு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

 மதன் லால் கருத்து

மதன் லால் கருத்து

இதுகுறித்து முன்னாள் வீரர் மதன் லால் கூறுகையில், வீரர்கள் உடல்தகுதியுடன் இல்லை என்று கூறுவது நல்லதல்ல. எங்கோ தவறு நடக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? பயிற்சியாளர்களை பொறுப்பேற்களா? இதனால் பலன் இந்தியா ஆடும் போட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வை எடுக்கலாம். எப்போது நாட்டுக்காக ஆடுவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உற்சாகம் இல்லை

உற்சாகம் இல்லை

இந்திய அணி சரியான திசையில் செல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி புத்துணர்வுடன் காணவில்லை. வழக்கமான இந்திய அணி போல் வீரர்கள் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுவதற்கான புத்துணர்ச்சி இல்லை. சீனியர் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளில் எத்தனை சதங்கள் விளாசி இருக்கிறார்கள். இதற்கு கை, கண்களும் ஒருங்கிணைப்புடன் இல்லாததே காரணம்.

பிரத்யேக வீரர்கள் தேவை

பிரத்யேக வீரர்கள் தேவை

வயதாகும் போது இந்த பிரச்சினை வழக்கமாக வருவது தான். ஆனால் அதனை சரி செய்ய வேண்டும். திடீரென இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக தெரிகிறது. விக்கெட்டுகள் வீழ்த்த சிரமப்படுகிறார்கள். வங்கதேச அணியின் கீழ் நிலையில் விளையாடும் பேட்ஸ்மேன்களை சதம் விளாச அனுமதிக்கிறார்கள். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகை கிரிக்கெட்டுக்கு என பிரத்யேக கிரிக்கெட் வீரர்கள் கொண்டுள்ளது. ஏன் இந்திய அணி நிர்வாகம் அவ்வாறு திட்டமிட மறுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

Story first published: Friday, December 9, 2022, 0:16 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
Former legend Madan Lal has opined that Indian cricketers should give priority to playing for the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X