For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே இவரை ஒண்ணும் பண்ண முடியாது.. சச்சின் சாதனையை செய்து நிரந்தர இடம் பிடித்த இளம் வீரர்!

Recommended Video

வெஸ்ட் இண்டீசை அழ வைத்த விஹாரி புதிய சாதனை

கிங்க்ஸ்டன் : இந்திய டெஸ்ட் அணி வீரர் ஹனுமா விஹாரி, 29 ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர் செய்த அரிய சாதனை ஒன்றை செய்து அசத்தி இருக்கிறார்.

பேட்டிங் வரிசையில் ஆறாம் இடம் அல்லது அதற்கும் கீழே இறங்கினாலும், ரன் எடுப்பதில் சச்சின் 1990இல் செய்த சாதனை ஒன்றை தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் செய்து இருக்கிறார் சதம் அடித்த ஹனுமா விஹாரி.

சதம்

சதம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 416 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சிறப்பாக ரன் குவித்தது ஹனுமா விஹாரி தான். அவர் ஆறாம் இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கி சதம் அடித்தார்.

பின் வரிசை கூட்டணி

பின் வரிசை கூட்டணி

225 பந்துகளில் 111 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார் ஹனுமா விஹாரி. இஷாந்த் சர்மா, ஜடேஜா உள்ளிட்ட பின் வரிசை வீரர்களுடன் தான் கூட்டணி அமைத்து சதத்தை எட்டினார்.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தடுமாறி வந்தது. அப்போதும் ஆறாம் இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கி அசத்தினார் விஹாரி.

அரைசதம் அடித்தார்

அரைசதம் அடித்தார்

ரஹானேவுடன் கூட்டணி அமைத்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் விஹாரி. இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 168 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. விஹாரி முதல் இன்னிங்க்ஸ் சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸ் அரைசதம் மூலம் சச்சின் செய்த சாதனையை நீண்ட காலம் கழித்து செய்தார்.

என்ன சாதனை?

என்ன சாதனை?

ஒரே டெஸ்ட் போட்டியில் ஆறாம் இடம் அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்ய இறங்கி, ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்த சாதனையை இந்திய அளவில் நான்கு வீரர்கள் மட்டுமே செய்து இருந்தனர். அந்தப் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்தார் ஹனுமா விஹாரி. பேட்டிங்கில் பின் வரிசையில் வந்தாலும் தன்னால் ரன் அடிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

சச்சின் செய்த சாதனை

சச்சின் செய்த சாதனை

சச்சின் 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 68 ரன்களும், அடுத்த இன்னிங்க்ஸில் 119* ரன்களும் குவித்தார். அதன் பின் 29 ஆண்டுகள் கழித்து விஹாரி அதே சாதனையை செய்துள்ளார்.

முதலில் செய்தது யார்?

முதலில் செய்தது யார்?

சச்சினுக்கு முன் பாலி உம்ரிகர் 1962இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 56 ரன்களும், அடுத்த இன்னிங்க்ஸில் 172* ரன்களும் குவித்து முதன் முதலில் இந்த சாதனையை செய்தார்.

அடுத்த இருவர் யார்?

அடுத்த இருவர் யார்?

அடுத்து டைகர் பட்டோடி 1967இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 64 மற்றும் 148 ரன்கள் எடுத்து இருந்தார். ஜெய்சிம்ஹா 1968இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 74 மற்றும் 101 ரன்கள் எடுத்து இருந்தார்.

அதிக ரன்கள் எடுத்தார்

அதிக ரன்கள் எடுத்தார்

இந்த அரிய சாதனை மட்டுமின்றி ஹனுமா விஹாரி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் 289 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடங்கும்.

முதல் சதம் அடித்தார்

முதல் சதம் அடித்தார்

மேலும், இரண்டாம் போட்டியில் அவர் அடித்த சதம் தான் அவரின் முதல் டெஸ்ட் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த சதத்தை தன் 12 வயதில் மறைந்த தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார் விஹாரி.

இடம் உறுதி

இடம் உறுதி

டெஸ்ட் போட்டிகளில் தன் இடம் உறுதியா? என இது நாள் வரை தெரியாமல் இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தன் அபாரமான ஆட்டத்தால் தன் இடத்தை உறுதி செய்துள்ளார் விஹாரி.

Story first published: Monday, September 2, 2019, 16:23 [IST]
Other articles published on Sep 2, 2019
English summary
IND vs WI 2019 : Hanuma Vihari achieved sachin’s feat after 29 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X