For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நான் வந்துட்டேன்னு சொல்லு" காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா.. முழு உடல்தகுதியுடன் தயார்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்வியுடன் வெளியேறியது.
இதற்கு காரணம் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாதது தான்.

இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

“சரியான நேரம் வந்துவிட்டது”.. பும்ரா, ஷமி, ஜடேஜாவுக்கு ஆப்பு ரெடி.. முன்னாள் வீரர் கூறியுள்ள யோசனை! “சரியான நேரம் வந்துவிட்டது”.. பும்ரா, ஷமி, ஜடேஜாவுக்கு ஆப்பு ரெடி.. முன்னாள் வீரர் கூறியுள்ள யோசனை!

தடுமாறும் இந்திய அணி

தடுமாறும் இந்திய அணி

அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்குள் வந்த அவருக்கு காயத்தின் தன்மை அதிகரித்ததால் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இந்திய அணி டி20 உலகக்கோப்பைத் தொடரின் அடைந்த தோல்விக்கு பின், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என தோற்றது.

 வங்கதேசத்துடன் தோல்வி

வங்கதேசத்துடன் தோல்வி

தற்போது வங்கதேசத்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-1 என்ற கணக்கில் தோல்விகளை சந்தித்து ஏமாற்றியிருக்கிறது. இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ள அட்டவணையை தற்போது பிசிசிஐ சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.

இந்தியா வரும் இலங்கை

இந்தியா வரும் இலங்கை

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதில் டி20 தொடர் ஜனவர் 3, 5, 7 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நியூசிலாந்து - இந்தியா தொடர்

நியூசிலாந்து - இந்தியா தொடர்

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் ஜனவரி 27, 29, பிப்ரவரி 1ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஆஸி. டெஸ்ட் தொடர்

ஆஸி. டெஸ்ட் தொடர்

5 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 2 என இந்தியா வெற்றி கண்டது. இதன்பின்னர் தற்போது தான் இரு அணிகளும் மோதுகின்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா

காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா

இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்பதால், அனைத்து சீனியர் வீரர்களும் காயத்தில் இருந்து வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். குறிப்பாக பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெல்வது கடினம். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து பூரணமாக குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்திய அணியில் பும்ரா

விரைவில் இந்திய அணியில் பும்ரா

இதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பும்ராவை விளையாட அனுமதிக்கலாம் என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது. பும்ரா இந்திய அணிக்கு திரும்பும்பட்சத்தில், இந்திய அணியின் பந்துவீச்சு மேலும் வலிமைபெறும் என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 16, 2022, 23:58 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
It has been reported that India's star fast bowler Bumrah has recovered from his injury and is fully fit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X