For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போது வேண்டாம்.. ரிஸ்க் எடுக்கமுடியாது.. ஒதுங்கி செல்லும் பாண்டியா..மும்பை மீது வலுக்கும் சந்தேகம்

அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் பாண்டியாவை அணி நிர்வாகம் பெரிய அளவில் பயன்படுத்தாதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் 2020 தொடரை மும்பை அணி தோல்வியுடன் தொடங்கிய நிலையில், நேற்று அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளது. சென்னை அணியிடம் வீழ்ந்த நிலையில் நேற்று கொல்கத்தாவை மும்பை அணி அசால்ட் செய்து வீழ்த்தியது.

நேற்று நடந்த கொல்கத்தா மற்றும் மும்பை இடையிலான போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

நேற்று நடந்த போட்டியில் மும்பை வெற்றிபெற்றாலும் அந்த அணியில் முக்கியமான பிரச்சனை ஒன்றுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் மும்பைக்கும் சென்னைக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு பவுலிங் தரப்படவில்லை. பீல்டிங் செய்தார். சரியாக பேட்டிங் செய்யவில்லை.

பவுலிங் ஏன்?

பவுலிங் ஏன்?

பிட்ச் காரணமாக அவருக்கு பவுலிங் தரப்படாமல் இருந்திருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அதன்பின் நேற்று நடந்த போட்டியிலும் பாண்டியாவிற்கு பவுலிங் தரப்படவில்லை. நேற்று போட்டி முழுக்க பீல்டிங் செய்தார். சரியாக பேட்டிங் செய்யவில்லை. வந்த வேகத்தில் ஹிட் அவுட்டாகி சிரித்தபடி வெளியேறினார். இந்த நிலையில் ஏன் ஹர்திக் பாண்டியாவிற்கு பவுலிங் கொடுப்பது இல்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

இரண்டு போட்டியாக ஹர்திக் பாண்டியாவிற்கு பவுலிங் கொடுக்கப்படவில்லை. விக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தும் கூட பாண்டியா போன்ற கேம் சேஞ்சருக்கு பவுலிங் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இவர் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக விளையாடவில்லை. அதேபோல் பெரிய அளவில் பயிற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

காயம் காரணம்

காயம் காரணம்

காரணம், இவர் உடலில் செய்யயப்பட்ட ஆபரேஷன்கள். கடந்த நவம்பர் மாதம் இவருக்கு லண்டனில் ஆபரேஷன் செய்யப்பட்டது. முதுகில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது.முதுகில் சதையில் ஏற்பட்டு இருந்த பாதிப்பு காரணமாக இவருக்கு இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் செய்யப்பட்ட பின் இவரால் இரண்டு வாரம் நடக்க கூட முடியவில்லை.

தகுதி உள்ளதாக ?

தகுதி உள்ளதாக ?

இந்த நிலையில் மீண்டும் பேட்டிங் செய்ய வந்து இருந்தாலும் அவருக்கு பவுலிங் கொடுக்கப்படுவது இல்லை. இதனால் அவர் உண்மையில் முழு உடல் தகுதியோடு இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு ஆல்ரவுண்டரை பேட்டிங் மட்டும் செய்ய பயன்படுத்துகிறார்கள். பவுலிங் செய்ய முடியாதவரை பேட்டிங் மட்டும் செய்ய வைப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

அவர் உண்மையில் உடல் தகுதியோடு இருக்கிறதா, இல்லை மும்பை தேவை இல்லாமல் ரிஸ்க் எடுக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நேற்று பதில் அளித்த மும்பை கோச் ஜெயவர்த்தனே, பாண்டியாவிற்கு இப்போது ஓவர் கொடுக்கும் திட்டம் இல்லை. அவருக்கு ஓவர் கொடுக்க இன்னும் சில மேட்ச்கள் காத்திருக்க வேண்டும். அவரை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. இப்போது அவருக்கு ஓவர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 24, 2020, 16:28 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020: Why MI is not using Bowler Hardik Pandya in matches in this season?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X