பயந்த மாறியே ஆயிடிச்சே...ஐபிஎல் குழுவில் அதிகரிக்கும் கொரோனா..ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் போர்க்கொடி

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வீரர்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கேப்டனா அறிவிச்சவுடனே விராட், ரோகித், தோனி அடுத்தடுத்து பாராட்டினாங்க... சந்தோஷமா இருந்துச்சு!

இந்நிலையில் மும்பையில் தங்கவைப்பட்டிருந்த ஐபிஎல் ஒளிபரப்பு உழியர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை அணியில் கொரோனா

சென்னை அணியில் கொரோனா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு இந்தியாவில் மொத்தம் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி விரர்களும் ஹோட்டல் அறையில் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அணிகளுக்குள் கொரோனா நுழைந்துள்ளது. குறிப்பாக மும்பையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்யும் துறையை கையாளும், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என 14 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மும்பையில் உள்ள ஃபோர் சீசன் ஹோட்டலில் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போர்க்கொடி

போர்க்கொடி

முன்னதாக மும்பையில் போட்டிகளை நடத்துவதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து பிசிசிஐ-ல் இருந்து வெளியான தகவலில், களத்தில் ஊழியர்களுக்கு கொரோனா ஏற்படுமானால், ஒளிப்பரப்பு பணியில் பல ஊழியர்கள் மைதானத்தில் இருக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் கொரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. எனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பையில் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வான்கடே மைதானம்

வான்கடே மைதானம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஐபிஎல்-க்கும் அது இடையூரை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கேடே மைதானத்தில் பணிபுரியும் கள ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல ஐபிஎல் போட்டிகளை மேற்பார்வையிடம் அதிகாரிகள் 8 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

அடுத்தடுத்த வீரர்கள்

அடுத்தடுத்த வீரர்கள்

ஊழியர்கள் மட்டுமின்றி அணி வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் முகாமிட்டுள்ள சென்னை அணியை சேர்ந்த ஒரு ஊழியருக்கும், டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர் பட்டேலுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் இருந்து வேறு நகரத்திற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அணிகளிடம் இருந்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் வலுத்து வருகிறது.

பிசிசிஐ

பிசிசிஐ

இதுகுறித்து பதிலளித்துள்ள பிசிசிஐ, சரியான முறையில் பபுளில் இருந்தால் எந்த பாதிப்பும் வராது. கடந்த முறை ஐபிஎல்-ம் அப்படிதான் நடைபெற்றது. மும்பை அரசிடம் இருந்து முறையான அனுமதிகள் வாங்கப்பட்டுள்ளது. வீரர்களை பாதுகாக்க உதவி ஊழியர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். எனவே மும்பையில் போட்டி நடைபெறுவது குறித்து எந்த பயமும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
14 members in IPL Broadcast Bio-Bubble test positive in Mumbai
Story first published: Tuesday, April 6, 2021, 12:25 [IST]
Other articles published on Apr 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X