For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மனுஷன் யா..மோரிஸ் சொன்ன அந்த வார்த்தைகள்..வெற்றி கூட முக்கியமில்லை. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

மும்பை: கொல்கத்தா அணியை வீழ்த்தியதற்கு பிறகு , கிறிஸ் மோரிஸ் போட்டி குறித்து பேசாமல், வேறு ஒன்றை பற்றி பேசியது ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதே பொழப்பா போச்சு.. அவங்களால தான் எல்லாமே.. கொல்கத்தாவின் தோல்விக்கு மோர்கன் அதிரடி குற்றச்சாட்டு! இதே பொழப்பா போச்சு.. அவங்களால தான் எல்லாமே.. கொல்கத்தாவின் தோல்விக்கு மோர்கன் அதிரடி குற்றச்சாட்டு!

ராஜஸ்தானின் வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக அமைந்தார். கொல்கத்தா அணியில் அவர் கைப்பற்றிய 4 விக்கெட்களால் அந்த அணியால் 133 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆட்டம்

ஆட்டம்

முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் நிதிஷ் ரானா, சுப்மன் கில், சுனில் நரேன் ஆகியோர் வழக்கம் போல் பெரிய அளவில் ரன் அடிக்காமல் வெளியேறினர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ராகுல் திரிபாதி மட்டும் 36 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் மோர்கன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் பரிதாபமாக ரன் அவுட்டானார். கிறிஸ் மோரிஸ் சிறப்பான த்ரோவால் அவரின் விக்கெட்டை எடுத்தார்.

 கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் பயத்தை காட்டிய தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களின் ஆட்டத்தை ஒற்றை ஆளாக முடித்து வைத்தார் கிறிஸ் மோரிஸ். குறிப்பாக அவர் வீசிய 18வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிஅசத்தனார். இதனால் கொல்கத்தா அணியால் 133 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

மோரிஸ்

மோரிஸ்

போட்டிக்கு பின்னர் பேசிய மோரிஸ், இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் அழிவதை பார்க்க முடிகிறது. கொரோனா பேரழிவு குறித்து எங்கள் கடந்த 2 நாட்களாக பேசி வருகிறோம். அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். பகலிரவு பார்க்காமல் உலகம் முழுவதும் முன்களப்பணியாளர்கள் செய்யும் பணி மிகப்பெரியது. அவர்கள் மிகப்பெரும் ஹீரோக்கள்.

 பெரிய வாய்ப்பு

பெரிய வாய்ப்பு

இந்த இக்கட்டான சூழலில் மக்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வரும் கடமை எங்களுக்கு உள்ளது. போட்டியில் வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் சரி. நாங்கள் மக்கள் முகத்தில் சிரிப்பை தருகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என மோரிஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 25, 2021, 16:41 [IST]
Other articles published on Apr 25, 2021
English summary
Chris Morris says RR Hurt for Everyone Around the World because of pandemic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X