ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

ஐபிஎல்: இறுதிப்போட்டியில் இந்த 2 அணிகள் தான்.. அடித்துக் கூறும் ஆகாஷ் சோப்ரா..உற்சாகத்தில் ரசிகர்கள்

மும்பை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் மட்டும் இரண்டு அல்லது மூன்று சதங்களை விளாசி அசத்துவார் என முன்னாள் வீரர் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 19ம் முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல்: தோனியின் ஆஸ்தான வீரர்களே இல்லை.. அடுத்தடுத்து விலகல்.. சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்! ஐபிஎல்: தோனியின் ஆஸ்தான வீரர்களே இல்லை.. அடுத்தடுத்து விலகல்.. சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்!

இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை அனைத்து அணிகளும் தீவிரமாக செய்து வருகின்றன.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் பரம எதிரிகள் போன்று பார்க்கப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இது ஒருபுறம் இருக்க இந்தாண்டு ஐபிஎல் தொடரில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்றும் யார் கோப்பையை வெல்வார்கள் என்றும் எந்த வீரர் அதிக ஸ்கோர் அடித்து ஜொலிப்பார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் பாதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.

கம்பீர் கணிப்பு

கம்பீர் கணிப்பு

இந்நிலையில் இந்தாண்டு கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுவார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர்,

இந்த தொடரில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். ஆனாலும் இதுவரை அவரிடமிருந்து அவருடைய பெஸ்ட்டை நாம் பார்க்கவில்லை. ஆர்சிபி வீரர் விராட்கோலி 2016ஆம் ஆண்டு 973 ரன்களைக் குவித்தது போல கே.எல்.ராகுலும் நிச்சயம் ஒரு அருமையான சீசனை விளையாட முடியும். அதுமட்டுமின்றி ஒரே சீசனில் 2-3 சதங்களை அவரால் நிச்சயம் அடிக்க முடியும் எனக்கூறியுள்ளார்.

இளம் பட்டாளம்

இளம் பட்டாளம்

இந்த தொடரில் பஞ்சாப் அணி நிறைய மாற்றங்களை செய்து வந்தாலும் பெரும் அளவில் சொதப்பி வருகின்றன. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6வது இடத்தில் உள்ளது. இளம் வீரர்களை அதிகம் வைத்துள்ள இந்த அணி 2வது பாதி தொடரிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Cricketer Gambhir, predicts the best player of this season IPL
Story first published: Wednesday, September 15, 2021, 12:58 [IST]
Other articles published on Sep 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X