For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு புகழ்ச்சியா... ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் ஆர்சிபி ஓப்பனர். உலகக்கோப்பைக்கு ஆல் ரெடி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய தேவ்தத் பட்டிக்கல் குறித்து முன்னாள் வீரர் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

Recommended Video

'Indian Team-ல் இடம் பெற Padikkal-க்கு எல்லா தகுதியும் இருக்கு' | Oneindia Tamil

ராஜஸ்தான அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இவ்ளோ சீக்கிரமாவா... இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள்.. ரொம்ப மோசம்பா! இவ்ளோ சீக்கிரமாவா... இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள்.. ரொம்ப மோசம்பா!

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ஆர்சிபி அணி 16.3 ஓவர்களில் 181/0 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் தொடக்க வீரர்கள் விராட் கோலி - தேவ்தத் பட்டிக்கல். சிறப்பாக ஆடிய இருவரும் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் பவுலர்கள் விழிப்பிதுங்கி நின்றனர். குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல் இந்த போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். 52 பந்துகளை சந்தித்த அவர் 101* எடுத்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இதே போல கேப்டன் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

தனியாக தெரிந்தார்

தனியாக தெரிந்தார்

இந்நிலையில் அவரின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார், அவர், போட்டியை தாண்டி தனித்துவமாக பார்க்க வேண்டியது. அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். எதிரணி வைத்திருந்த ஃபீல்ட்டிங் முறையை வைத்தே எதுபோன்ற பந்து வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து செயல்பட்டார்.

சங்ககாரா பாராட்டு

சங்ககாரா பாராட்டு

இந்த போட்டியில் தேவ்தத் பட்டிக்கல்லின் ஆட்டத்தில் ஒரு பக்குவம் தெரிந்தது. விராட் கோலியுடன் அவர் சேர்ந்து விளையாடும் போது, என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என நிறைய விஷயங்களை கேட்டு அதன்படி செய்தார். இது பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் புகழாரம்

கவாஸ்கர் புகழாரம்

இதே போல இவரின் ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், தேவ்தத் பட்டிக்கல் விரைவில் இந்திய அணிக்காக விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் அவரிடம் அதற்கு ஏற்ற திறமை உள்ளது. ராஞ்சி போட்டி மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதே போல 50 ஓவர் போட்டிகளிலும் பல சதங்களை விளாசியுள்ளார் எனவே அவர் எப்போது இந்திய அணியில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 23, 2021, 17:09 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
Kumar Sangakkara praises RCB opener Pattikal after his 101* against RR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X