திக்திக் ஆட்டம்.. மும்பைக்கு எதிராக திணறிய ஹைதராபாத்.. படுதோல்வி.. ரோஹித் மாஸ் கேப்டன்சி!

மும்பை: ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் போட்டிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 8 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று 9வது ஆட்டம் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத்திற்கும் மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடந்தது.

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

இந்த தொடரில் ஹைதராபாத் மிகவும் மோசமாக ஆடி வருகிறது. முதலில் கொல்கத்தா அணியின் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. அதன்பின் பெங்களூர் அணியிடமும் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டியும் சென்னையில் நடந்ததால் இன்று சென்னையில் நடக்கும் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் உள்ளது.

மாற்றம்

மாற்றம்

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் இதுவரை டாஸ் வென்ற கேப்டன்கள் எல்லோரும் முதலில் பவுலிங் செய்யவே முடிவு செய்தனர். ஆனால் முதல்முறையாக இன்று ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

பேட்டிங்

பேட்டிங்

சென்னையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கஷ்டம் என்பதால் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்று ஆடும் ஹைதராபாத் அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஆடும் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பிரைஸ் டோ, மணீஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஸேக் சர்மா, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், முஜீப் ஊர் ரஹ்மான், கலீல் அகமது ஆகியோர் ஆடுகிறார்கள்.

மும்பை

மும்பை

இன்று மும்பை அணியில் ரோஹித் சர்மா, டி காக், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா, பும்ரா, போல்ட், ஆடம் மில்னே, ராகுல் சாகர் ஆகியோர் ஆடுகிறார்கள். கடந்த போட்டியில் மும்பை அணியில் ஆடிய ராகுல் சாகர் இன்று ஆடவில்லை.

பொல்லார்ட்

பொல்லார்ட்

இன்று ஓப்பனிங் இறங்கிய போது மும்பை நன்றாகவே ஆடியது. ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்துக்கொண்டே மும்பை ஹைதராபாத்திற்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் பவர் பிளே முடிந்த பின் ஓவர் போட வந்த விஜய் சங்கர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார். 6வது ஓவரில் 32 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவை விஜய் சங்கர் விக்கெட் எடுத்தார்.

டி காக்

டி காக்

அதன்பின் சூர்ய குமார் யாதவ் 10 எடுத்திருந்த நிலையில் விஜய் சங்கர் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் வரிசையாக மும்பையின் மிடில் ஆர்டர் அவுட் ஆனது. டி காக் 40 ரன்களுக்கு அவுட் ஆன பின் வரிசையாக மும்பை அணி திணறியது. கொஞ்சம் திணறிய பொல்லார்ட் கடைசி ஓவரில் கடைசி இரண்டு பாலில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்தார்.இன்று முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி வெற்றிபெற மும்பை 151 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது

ஹைதராபாத் பேட்டிங்

ஹைதராபாத் பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் இரண்டு ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் கூட அதன்பின் பிரைஸ்டோ பவர் பிளே முழுக்க அதிரடியாக ஆடினார். 22 பந்துகள் பிடித்த 4 சிக்ஸ், 3 பவுண்டரி என்று 43 ரன்கள் எடுத்தார். பிரைஸ்டோ அவுட்டான பின் வார்னர் மட்டும் நிலைத்து ஆடினார். இன்னொரு பக்கம் களமிறங்கிய விராட் சிங், மணீஷ் பாண்டே, அபிஷேக் சர்மா எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அவுட்

அவுட்

வார்னர் 36 ரன்கள் எடுத்து அவுட்டான பின் ஹைதராபாத் அணி நிலைகுலைந்து. இதையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் மட்டுமே கொஞ்சம் நிலையாக ஆடினார். குர்னால் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸ் அடித்து கைவிட்டு போன போட்டியை விஜய் சங்கர்தான் மீட்டு கொண்டு வந்தார். ஆனால் அவரும் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

தோல்வி

தோல்வி

கடைசி 5 ஓவர்களில் ரோஹித் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. விஜய் சங்கர் அவுட்டை தொடர்ந்து ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2021 தொடரில் மூன்று போட்டிகளில் ஹைதராபாத் தொடர் தோல்விகளை தழுவி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Mumbai Indians won the toss and chooses to bat against Hyderabad
Story first published: Saturday, April 17, 2021, 19:15 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X