ஒரு போட்டிக்கே இப்படியா.. ஐதாராபாத் அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் ரஷித் கான்.. அப்படி என்ன ஆனது?

சென்னை: ஐதராபாத் அணியின் இளம் வீரர் ஒருவர் கண்டிப்பாக இந்திய அணிக்கு சரியான ஆல்- ரவுண்டராக வருவார் என ரஷித் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் அபிஷேக் சர்மா குறித்து ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷித் கான் புகழ்ந்துள்ளார்.

நேற்று மேட்சில்.. "அந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா? சிஎஸ்கேவிற்கு கிடைத்த குட் நியூஸ்.. செம சம்பவம்!

முதல் வெற்றி

முதல் வெற்றி

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை 120 ரன்களுக்குள் சுருட்டியது ஐதராபாத் அணி. இதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து சுலபமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 63 ரன்களும், கேன் வில்லியம்சன் 16 ரன்களும் எடுத்தனர்.

இளம் வீரர்

இளம் வீரர்

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வீரர் அபிஷேக் சர்மா. சிறப்பாக செயல்பட்ட இவர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிடில் ஆர்டரில் ஹிட்டர்ஸாக களமிறங்கிய ஹென்ரிக்யூஸ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து உதவினார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்துக்கொண்டிருக்கிறது.

புகழாரம்

புகழாரம்

இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள ரஷித் கான், அபிஷேக் சர்மா ஒரு நாள் இந்திய அணிக்கு சரியான ஆல் ரவுண்டராக திகழ்வார். சொந்த நாட்டிற்காக நிறைய போட்டிகளில் களமிறங்குவார். அவருக்கு அந்த திறமை மற்றும் கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

கற்றல்

கற்றல்

தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அபிஷேக், நான் சிறுவயதாக இருக்கும் போது என் தந்தைதான் எனக்கு பயிற்சியாளர். அவர் ஒரு இடது கை ஸ்பின்னர். இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்த போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அந்த நம்பிக்கையைதான் நான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினேன். தற்போது நான் ஆட்டத்தின் எந்த சூழலில் வேண்டுமானாலும் பந்துவீச தாயாராக இருப்பதாக நினைக்கிறேன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rashid Khan Lauds Young talent of SRH after defeat Punjab kings
Story first published: Thursday, April 22, 2021, 16:43 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X