For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பரான கோலி கேப்டன்சி.. சொல்லி அடிக்கும் மேக்ஸி.. செமையான கம்பேக் கொடுக்கும் ஆர்.சி.பி!

துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் கேப்டனும் வேண்டாம், ஐ.பி.எல் கேப்டனும் வேண்டாம் என்று விராட் கோலி முடிவு செய்துள்ள நேரத்தில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை கம்பீரமாக பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

நேற்று பெங்களூரு-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிய ஆட்டத்தில் சூப்பரான வெற்றி பெற்றுள்ளது பெங்களுரு. ராஜஸ்தானுக்கு லுயிஸ்-ஜெய்ஸ்வால் அதிரடியான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டுஅந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு

கோலி கேப்டன்சி

கோலி கேப்டன்சி

அசுரத்தனமான ஆட்டமாடிய 37 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு ஆட்டம் முழுமையாக ஆர்சிபி பக்கம் மாறியது. 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் வலுவாக இருந்து ஆட்டம் முழுமையாக பெங்களுரு பக்கம் திரும்ப கோலி கேப்டன்சியும் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

Recommended Video

Glenn Maxwell explodes as RCB win by 7 wickets | RR VS RCB |Oneindia Tamil
ரொட்டேட்

ரொட்டேட்

சர்ப்ராஸ் அகமது, யுஸ்வேந்திர சஹல் மற்றும் ஹர்சல் படேல் என்று பவுலிங்கை மாற்றி, மாற்றி ரொட்டேட் செய்து கைவிட்டு போன மேட்சை இழுத்து வந்தார் கோலி. பேட்டிங்கிலும் கோலியின் படை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக அசத்தியுள்ளது. கோலியும், தேவ்தத் படிக்கலும் முதல் விக்கெட்டுக்கு 5 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்க, பின்பு வந்த கே.எஸ். பரத்தும், மேக்ஸ்வெல்லும் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.

கே.எஸ்.பரத்

கே.எஸ்.பரத்

இந்த ஐ.பி.எல்.லில் சிறப்பாக விளையாடி வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஜெய்ஸ்வால் ஆகிய இந்திய இளம் வீரர்கள் வரிசையில் கே.எஸ்.பரத்துக்கும் கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. அவருடைய ஷாட் மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஷார்ட் தேர்வும் அருமையாக உள்ளது. இதேபோல் பவுலிங் டிபார்ட்மெண்டில் போன மேட்ச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்சல் படேல் தொடர்ந்து விக்கெட்டுகளை அள்ளி வருகிறார். என்னை ஏன் டி20 இந்திய டீமில் எடுக்கவில்லை என்று கேட்பதுபோல் சஹல் பந்துவீசி வருகிறார்.

கோப்பை வெல்ல வாய்ப்பு

கோப்பை வெல்ல வாய்ப்பு

ஒரு டீமாக பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இப்போது மிகவும் வலுவடைந்து வருகிறது. கடந்த ஐ.பி.எல் சீசனில் கடுமையாக சொதப்பிய மேக்ஸ்வெல் இந்த முறை அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும், முதலுமாக கொடுத்து வருகிறார். டி வில்லியர்ஸ்சும் பார்முக்கு வந்து விட்டால் பெங்களூரு அணி கோப்பையை ஏந்த பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் பெங்களுரு 3-வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, September 30, 2021, 12:42 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
Bangalore won the match against Rajasthan Royals. The kohli captaincy was also the main reason for the game to fully return to the Bangalore side
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X