For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி அணிக்குள் வந்தது எப்படி..? "தல" டெபுட்டாகி 17வது ஆண்டு.. சொல்ல மறந்த கதை!

சென்னை: இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத அடையாளமாக விளங்கி வருபவர் தோனி..

ஐ.சி.சி. உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் அணியின் நம்பர் 1 இடம், ஐ.பி.எல். கோப்பை என அனைத்து கோப்பைகளையும் வென்ற மாபெரும் கேப்டன்

இத்தகைய சாதனை படைத்த தோனி, 2004ஆம் ஆண்டு இதே நாள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி காலடி எடுத்து வைத்தார்.

அடேங்கப்பா..!! இவ்வளவு சம்பளமா? ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்த தோனி…!! டாப் 5 வீரர்கள் பட்டியல்அடேங்கப்பா..!! இவ்வளவு சம்பளமா? ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்த தோனி…!! டாப் 5 வீரர்கள் பட்டியல்

சொல்ல மறந்த கதை

சொல்ல மறந்த கதை

தோனியின் சாதனைகள் நமக்கு நன்றாகவே தெரியும், தோனி ரயில்வேயில் பணிபுரிந்து வெற்றி பெற்ற கதையும் நமக்கு தெரியும். ஆனால் இரண்டுக்கும் நடுவே அவர் அணிக்குள் எப்படி வந்தார் என்ற யாரும் சொல்லாத கதை ஒன்று உண்டு.. அது உங்களுக்கு தெரியுமா? ரஞ்சி கோப்பையில் கலக்கிய அனைவருக்கும் இடம் கிடைப்பதில்லை. பிறகு எப்படி ராஞ்சியில் இருந்த தோனிக்கு மட்டும் இடம் கிடைத்தது.

விக்கெட் கீப்பர் தேவை

விக்கெட் கீப்பர் தேவை

இந்திய கிரிக்கெட் அணியில் ரொம்ப காலமாகவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற ஆளே இல்லை. நமது டிராவிட் தான் அணிக்காக அந்த பொறுப்பை ஏற்று கொண்டார். டிராவிட்டை வைத்தே காலத்தை ஓட்ட முடியாது. அணிக்கு என்று தனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை என்று கங்குலி உறுதியாக இருந்தார்.

கண்டறிந்த குழு

கண்டறிந்த குழு

அப்போது பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த டால்மியா, திறமையான வீரர்களை கண்டறிய ஒரு திட்டத்தை உருவாக்கினார். அந்த குழு, நாட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று பார்த்த போது தான் தோனி துலிப் கோப்பையில் கிழக்கு பிராந்தய அணிக்காக விளையாடினார். அவரின் வித்தியாசமான அதிரடி ஆட்டம் அந்த குழுவின் கவனத்தை ஈர்த்தது.பிரகாஷ் போடார் என்ற முன்னாள் வீரர் தான் தோனி குறித்து கிரிக்கெட் அகாடமிக்கு தெரிவித்தது.

இந்தியா ஏ அணி

இந்தியா ஏ அணி

இதனையடுத்து தோனியை கண்காணிக்க தொடங்கிய பி.சி.சி.ஐ., அவருக்கு ஜிம்பாப்வே ஏ அணியுடன் விளையாட வாய்ப்பு வழங்கியது.இதில் தோனி விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டார். பிறகு பாகிஸ்தான் ஏ,கென்யா ஏ அணியுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ விளையாடியது. இதில் தோனி 2 சதங்கள் உள்பட 362 ரன்கள் குவித்தார். தோனியின் திறமையை அறிந்த கங்குலி, அவரை அணியில் தேர்வு செய்ய அழுத்தம் கொடுத்தார்

Recommended Video

From CSK, Gabba Win To Neeraj's Gold- Indian Sports Moments 2021 | OneIndia Tamil
முதல் போட்டி

முதல் போட்டி

அதன் பின் இதே நாள் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தோனி களமிறங்கினார். ஆனால் முதல் போட்டியில் பந்தை எதிர்கொள்ளாமலேயே ரன் அவுட் ஆனார். இருப்பினும் தோனிக்கு பாகிஸ்தான் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நிகழ்ந்த அனைத்தும் வரலாறு தான்.

Story first published: Thursday, December 23, 2021, 18:13 [IST]
Other articles published on Dec 23, 2021
English summary
On this day EP 2 India former captain MS Dhoni made his debut in International cricket2004ஆம் ஆண்டு இதே நாள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி காலடி எடுத்து வைத்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X